ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் காங்கிரசுக்கு ஆதரவு! தொடரும் அரசியல் குழப்பம்!!

“முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தனக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அசோக் கெஹ்லாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.”

எதிர்க் கட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேவை தற்போது இல்லை: பாஜக

New Delhi:

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து தற்போது பல முக்கியத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலாட், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 எம்.எல்.ஏக்களை தனியாக பிரித்து தன்னிச்சையாக செயல்பட தொடங்கினார். இதனை தொடர்ந்து அவரது அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாஜகவின் மிக முக்கியமான தலைவரான முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு உதவ முயற்சிக்கிறார் என்று ராஜஸ்தானில் உள்ள பாஜக கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவாலின் ட்வீட் செய்துள்ளார். வசுந்தரா ராஜே, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முகாமை நாசப்படுத்த முயற்சிப்பதாகவும் பெனிவாலின் கூறியுள்ளார்.

“முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தனக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அசோக் கெஹ்லாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.” என பெனிவால் ட்வீடரில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் புனியா, பெனிவாலிடம் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்களுக்கு மத்தியில் முன்னதாக நேற்று, ராஜஸ்தான் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரான குலாப் சந்த் கட்டாரியா, “எதிர்க் கட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேவை தற்போது இல்லை. ஒருவேளை தேவையை நாங்கள் உணர்ந்தால், கட்சி (பாஜக) ஒன்றாக அமர்ந்து அதற்கான முடிவை எடுக்கும்.” என கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக மாநில முதல்வர் 109 எம்.எல்.ஏகளின் ஆதரவினை சமீபத்தில் அவர் உறுதி செய்தார். மொத்தமுள்ள 200 எண்ணிக்கையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 101 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக 73 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.