This Article is From Dec 27, 2018

'அழித்தல்'தான் பாஜகவின் தொழில் : அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்

வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்களை சேர்ப்பேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.

'அழித்தல்'தான்  பாஜகவின் தொழில் : அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்

வாக்காளர்கள் பட்டியலில் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு பாஜகவே காரணம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

New Delhi:

டெல்லி வாக்காளர்கள் பட்டியலில் பெரும் எண்ணிக்கையில் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழித்தல்தான் பாஜகவின் தொழில் என்று கிண்டல் செய்துள்ளார். அக்கட்சியை பிசாசுடன் ஒப்பிட்டும் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகளையும் ரூ. 50 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

பாஜகவின் தொழிலே அழிப்பதுதான். அதனை யார் செய்வார்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். பிசாசுகள் மட்டுமே அழித்தலில் ஈடுபடும். பாஜகவும் பிசாசைப் போன்றதுதான்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்ப்பேன் என்று உறுதி அளித்தார். ஆனால், அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார்.