This Article is From Oct 05, 2019

''தமிழிசை இல்லாதபோதும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது'' - வானதி ஸ்ரீனிவாசன்

பாஜக தலைவராக பொறுப்பில் இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழக பாஜக தலைவர் பொறுப்பு காலியாக உள்ளது.

''தமிழிசை இல்லாதபோதும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது'' - வானதி ஸ்ரீனிவாசன்

விரைவில் தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

''தமிழகத்தில் பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோதும் கட்சி வளர்ந்தது; இப்போதும் வளர்ந்து கொண்டிருக்கிறது'' என்று கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.  

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜனுக்கு, தெலங்கானா கவர்னர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வகித்து வந்த பாஜக தமிழக தலைவர் பொறுப்பு காலியாக உள்ளது. 

அந்த இடத்திற்கு பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோரில் ஒருவர் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், பல்வேறு அரசியல் சூழல் குறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- 


பாஜகவை பொறுத்தவரைக்கும் தலைவர் பதவி என்பது ஒரு பொறுப்பு. ஆனால் ஒரு குழுவாக இருந்துதான் எப்போதும் முடிவை எடுப்பார்கள்; செயல்படுத்துவார்கள். 

அதனால் ஒரு நபரைச்சுற்றி, ஒரு குடும்பத்தைச் சுற்றி நடக்கிற கட்சி பாஜக அல்ல. ஜனநாயக ரீதியாக நாங்கள் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்சிப் பணிகள் நடந்து வருகின்றன. 

பாஜக தமிழக தலைவராக தமிழிசை இருந்தபோதும் கட்சி வளர்ந்தது. இப்போதும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 

.