காந்தியை உதட்டளவிலும் கோட்சேவை மனதிலும் கொண்டு பாஜக ஆட்சி நடத்துகிறது - அசாதுதீன் ஓவைசி

“தற்போதைய ஆட்சியாளர்கள் நாதுராம் கோட்சேவை தங்களின் ஹீரோவாக போற்றுகிறார்கள். கோட்சே காந்தியை மூன்று தோட்டாக்களால் கொன்றார். ஆனால், ஒவ்வொரு நாளும் மக்கள் இங்கு கொல்லப்படுகிறார்கள்” என்று கூறினார்.

காந்தியை உதட்டளவிலும் கோட்சேவை மனதிலும் கொண்டு பாஜக ஆட்சி நடத்துகிறது - அசாதுதீன் ஓவைசி

காந்தியின் அஹிம்சையைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

Aurangabad:

மக்களவை எம்.பி அசாதுதீன் ஓவைசி  பாஜக அரசினை விமர்ச்சித்துள்ளார்.  பாஜவினர் காந்தியை குறித்து உதட்டளவில் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் மனதில் நாதுராம் கோட்சே தான் உள்ளார் என்று கூறினார். அகில இந்திய மஜ்லிஸ்- இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி,  ஆளும் கட்சி கோட்சேவை தங்கள் ‘ஹீரோ' வாக கருதுவதாக கூறினார். 

“ நாம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். தற்போதைய பாஜக அரசு நாதுராம் கோட்சேவை மனதில் வைத்துக் கொண்டும் காந்தியைக் குறித்து வெற்று வார்த்தைகளாக மட்டுமே கூறுகிறது” என்று ஓவைசி கூறினார். 

“பாஜக தனது கடையை காந்தி என்ற பெயரில் நடத்தி வருகிறது. இந்த அரசாங்கம் காந்திஜி என்ற பெயரில் முழு நாட்டையும் மழுங்கடிக்கிறது” என்று தெரிவித்தார். 

பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்த  ஓவைசி, “தற்போதைய ஆட்சியாளர்கள் நாதுராம் கோட்சேவை தங்களின் ஹீரோவாக போற்றுகிறார்கள். கோட்சே காந்தியை மூன்று தோட்டாக்களால் கொன்றார். ஆனால், ஒவ்வொரு நாளும் மக்கள் இங்கு கொல்லப்படுகிறார்கள்” என்று கூறினார். 

உழவர்களின் தற்கொலைகளைப் பற்றி பேசிய ஓவைசி “ காந்தியின் அஹிம்சையைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. காந்தி விவசாயிகளை கவனித்துக் கொண்டார். ஆனால், இன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்போதைய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது…?” என்று கேள்வி எழுப்பினார். 

Newsbeep

‘மராத்வாடா முக்திசங்கிராம் தின்' சர்ச்சையில் லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து குறிப்பிட்டு பேசினார்.

“கடைசி நிஜாம், மிர் ஒஸ்மான் அலிகான்ம், எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் டெபாசிட் செய்த 1 மில்லியன் பவுண்டுகள் இன்று 45 மில்லியன் பவுண்டுகளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் இந்த தொகையை உரிமம் கோரியது அதே நேரத்தில் இந்த தொகையை இந்தியாவில் நிஜாம் குடும்பமும் கோரியது. லண்டன் நீதிமன்றம் இந்த பணம் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது

இந்த தொகையின் இன்றைய மதிப்பு 450 கோடி ரூபாய். இந்த பணத்தில் ஒரு பகுதி நிஜாம் குடும்பத்திற்கு சென்றாலும் அதில் பெரும் பகுதி இந்திய அரசுக்கு வரும்” என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அவுரங்காபாத் நகரத்தின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த தொகையை செலவிட வேண்டும் என்று ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.