பாஜகவுக்கு ஓராண்டில் மட்டும் ரூ.1,000 கோடி வருமானம்

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் ( Association for Democratic Reforms) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாஜகவுக்கு ஓராண்டில் மட்டும் ரூ.1,000 கோடி வருமானம்

கடந்த ஆண்டை விட தற்போது பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ. 7 கோடி குறைந்துள்ளது.


New Delhi: 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஓராண்டில் மட்டும் ரூ.1,000 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் ரூ. 750 கோடி 2017-18-ல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் ஓராண்டு வருமானம் குறித்த விவரங்களை அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் இன்னும் தெரிவிக்கவில்லை. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஏ.டி.ஆர். எனப்படும் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் அமைப்பு கட்சிகளின் வருமானம் குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

இந்த தகவலின்படி, கடந்த 2017-18-ல் மட்டும் பாஜகவுக்கு ரூ. 1,027.339 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 104.847 கோடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ. 51.694 கோடியும் வருமானம் கிடைத்துள்ளன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................