This Article is From Nov 11, 2019

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர்! - விழிபிதுங்கும் பாஜக!!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 இடங்களில், ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்று பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. 

Mumbai:


மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாஜக முக்கிய குழு உறுப்பினர்கள இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். 

முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. 

காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்றுள்ள பாஜக - சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அந்தக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வருகிறது. 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். 

4se6joc8

மகாராஷ்டிராவில் கடந்த அக்.24ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 15 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைக்க எந்த கட்சியினரும் முன்வரவில்லை. மூன்று வாரங்களாக இழுபறி நீடித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனால், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால் இந்த அழைப்பை ஆளுநர் விடுத்துள்ளார்.

மேலும் வரும் 11ஆம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பாஜகவின் குதிரை பேரத்தை தவிர்க்க சிவசேனா எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால், பாஜக. இந்த அழைப்பை ஏற்குமா? சிவசேனாவுடன் சமாதானா பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை, இந்நிலையில், பாஜக முக்கிய குழு உறுப்பினர்கள இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். 
 

.