பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

அமித் ஷா விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

Amit Shah: கடந்த செவ்வாயன்று அகமதாபாத்தில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் அமித் ஷா பிரார்த்தனை செய்தார்.

New Delhi:

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித் ஷா விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த செவ்வாயன்றுதான் அமித் ஷா அகமதாபாத்தில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், '' எனக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். கடவுளின் அருளாலும், உங்களது பிரார்த்தனையாலும் நான் விரைவில் குணம் அடைந்து விடுவேன்'' என்று கூறியுள்ளார்.

அமித் ஷாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

Newsbeep

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர்பதிவில், '' அமித் ஷாவிடம் பேசினேன். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். அமித் ஷா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் அமித் ஷா குணம் அடைய வாழ்த்துக் கூறியுள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ''அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவில் குணம் அடைய விரும்புகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.