மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் விபத்தில் சிக்கினார்! மருத்துவமனையில் அனுமதி!!

விபத்தில் பாஜக வேட்பாளரின் உதவியாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய இன்னொரு காரின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் விபத்தில் சிக்கினார்! மருத்துவமனையில் அனுமதி!!

விபத்தில் நொறுங்கிக் கிடக்கும் பாஜக வேட்பாளரின் கார்.


New Delhi: 

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பாஜக வேட்பாளர் சாந்தனு தாகூர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேற்கு வங்கத்தில் பாங்கோன் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் சாந்தனு தாகூர். இவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கைகட்டா என்ற இடத்திற்கு அருகே இன்னொரு கார் மோதியது.

r6gob61g

இதில் பாஜக வேட்பாளர் வந்த கார் பலத்த சேதம் அடைந்ததுடன், சாந்தனுவுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

266f7p6g

பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய இன்னொரு காரின் டிரைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக வேட்பாளரின் உடல் நிலை எப்படி உள்ளது என்கிற விவரம் உடனடியாக வெளியாகவில்லை. 

uhsukogg

விபத்து ஏற்பட்ட செய்தியை அறிந்ததும், சாந்தனு தாகூரின் ஆதரவாளர்கள் கைகட்டா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தார்கள். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................