மத்திய பிரதேச தேர்தல் : 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் 32 பேர் இடம் பெற்றுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மத்திய பிரதேச தேர்தல் : 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

நவம்பர் 28-ம் தேதி மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


Bhopal: 

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி பாஜக தனது 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 32 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய் வர்கியாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளக்கப்பட்டுள்ளது.

தற்போது வரைக்கும் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கு 226 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்து வருகிறது.

மத்திய பிரதேசத்தை பாஜகவிடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் இருக்கும் என கருதப்படுவதால் மத்திய பிரதேச தேர்தலும், அதன் முடிவுகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................