வைரலாகும் #சீஸ்டுசவால் பற்றி கேள்விப்பட்டீர்களா..? #CheesedChallenge

சிறு குழந்தைகளை நோக்கி சீஸ் துண்டுகளை வீசி, அதனை #சீஸ்டுசவால் என்ற பெயரில் இணையதளவாசிகள் பரப்பி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வைரலாகும் #சீஸ்டுசவால் பற்றி கேள்விப்பட்டீர்களா..? #CheesedChallenge

குழந்தைகளை நோக்கி சீஸ் துண்டுகளை எறிவதைதான் #சீஸ்டுசவால் என கூறி வருகின்றனர்


தினமும் புது புது சவால் என்ற பெயரில் பல சர்ச்சையான #சவால்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. தற்போது, அப்படி ஒன்றை #சீஸ்டுசவால் (#CheesedChallenge) என்ற பெயரில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் சிறு குழந்தைகளை நோக்கி சீஸ் துண்டுகளை வீசி, அதனை #சீஸ்டுசவால் என்ற பெயரில் இணையதளவாசிகள் பரப்பி வருகின்றனர்.

என்பிசி நீயூஸ் பொறுத்தவரை, இந்த சவாலை உருவாக்கியது @unclehxlmes என்னும் ட்விட்டர்வாசிதான். அவர், தான் பதிவிட்ட வீடியோவை அழித்து விட்டாலும், அதற்கு முன்பே பல பேர் #சீஸ்டுசவால் என்ற பெயரில் இதனை வைரல் ஆக்கியுள்ளனர்.

 

 

இந்த #சீஸ்டுசவால்-க்கு பலர் தங்களின் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர். 'இப்படியொரு செயலை செய்வதும் இல்லாமல் அதனை ட்ரெண்டிங் வேற செய்கிறீர்களா?' என பலர் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

'அந்த சிறு குழந்தைகளை மனசாட்சியே இல்லாமல் இப்படி கொடுமைபடுத்த எப்படித்தான் மனது வந்ததோ' எனப் பலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

 

 

 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................