This Article is From May 20, 2019

பட்டம்பெற வந்த 400 மாணவர்களுக்கு தொழிலதிபர் தந்த ஆச்சரியம்!

ராபர்ட் ஸ்மித் என்பவர் 4.4 பில்லியன் டாலர்கள் மதிப்புகளான சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஒரு தொழிலதிபர். அந்த விழாவின்பொழுது, அங்கு வந்துள்ள அனைத்து மாணவர்களின் கல்விக்கடனையும் தான் செலுத்துவதாக அறிவித்தார்.

பட்டம்பெற வந்த 400 மாணவர்களுக்கு தொழிலதிபர் தந்த ஆச்சரியம்!

ராபர்ட் ஸ்மித்

Washington:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த 400 மாணவர்களுக்கும் ஏற்கனவே ஒரு மறக்க முடியாத, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கும் நாளாகவே இருந்தது. ஏனென்றால், அந்த 400 மானவர்களும் அன்றைக்கு பட்டம் பெற போகிறார்கள். ஜார்ஜியா, அட்லான்டாவில் உள்ள மோர்ஹைஸ் கல்லூரியில் தான் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அங்கு தான் இந்த மாணவர்களுக்கு, இந்த பட்டத்தை தாண்டி ஒரு பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. 

ராபர்ட் ஸ்மித் தான் அந்த ஆச்சரியத்தை அளித்தவர். இவர் அந்த அறிவிப்பினை கூறிய பிறகு, அரங்கமே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கைதட்டல்களில் நிறைந்துபோனது. அப்படி அவர் என்ன அறிவித்தார்?

ராபர்ட் ஸ்மித் என்பவர் 4.4 பில்லியன் டாலர்கள் மதிப்புகளான சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஒரு தொழிலதிபர். இவரை அந்த பட்டமளிப்பு விழாவிற்கு விருந்தினராக அழைக்கப்பட்டு, கவுரவ பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவின்பொழுது, அங்கு வந்துள்ள அனைத்து மாணவர்களின் கல்விக்கடனையும் தான் செலுத்துவதாக அறிவித்தார். இதுதான், அந்த மாணவர்களுக்கு பெரிய ஆச்சரியமாக அமைந்தது. மேலும் அரங்கமே கரவொலிகளில் மூழ்கவும் இந்த அறிவிப்புதான் காரணம். 

இந்த நாநூறு பேரின் கல்விக்கடன் என்பது, சுமார் 40 மில்லியன் டாலர்கள், என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித் முன்னதாகவே, இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர்கள், நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆனால், அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று கூறியிருக்கும் அறிவிப்பு என்பது மிகப்பெரியது.

ஸ்மித், கார்னெல் மற்றும் கொலம்பியா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று, 2000ஆம் ஆண்டு விஸ்டா ஈக்விடி பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தை தோற்றுவித்தார். 2005ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய பணக்காரராக அனைவராலும் அறியப்பட்டார்.

சமீப காலமாக, கல்லூரிகளுக்கான கல்வித்தொகை என்பது உயர்ந்துகொண்டே வருகிறது. மாணவர்களும் கல்விக்கடன் பெறும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அங்குள்ள மாணவர்களின் மொத்த கல்விக்கடன் என்பது 1.5 டிரில்லியனை எட்டியுள்ளது என்கிறது, அந்த நாட்டை செர்ந்த ஃபிட்ச் ரேட்டிங் ஏஜென்சி. 

இதுகுறித்து, புதிதாக பட்டம் பெற்றிருக்கும் ஒரு மாணவன், வருகின்ற 2020ல் பட்டம் பெற இருக்கும் மற்றோரு மாணவன், இருவரின் தந்தையான சார்லெஸ் ரெலிஃபோர்ட் என்பவர்,"மீண்டும் அடுத்த வருடமும் அவர் வருவார்." என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

.