பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராமத்தினர்!

பீகாரின், நவாடாவில் மயக்க நிலையில் இருக்கும் பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராமத்தினர்!

பீகாரின், நவாடாவில் 18 வயது பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு கிராம மக்களால் அடிக்கப்பட்டார்.


Nawada: 

ஹைலைட்ஸ்

  1. மரத்தில் கட்டி வைக்கப்பட்டு கிராம மக்களால் அடிக்கப்பட்ட பெண்.
  2. ஓடிப்போன பெண்ணை மீண்டும் கிராமத்திற்கு அழைத்து கொண்டு வந்தார்கள்.
  3. வேறு சாதி ஆணுடன் தனது மகள், வீட்டை விட்டு வெளியேறியதாக தந்தை கூறினார்.

தலைநகர் பாட்னாவில் இருந்து 117 கிமீ தொலைவில் உள்ள நவாடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. வேறு சாதி ஆணுடன் ஓடிப்போன அப்பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு கிராம மக்களால் பல மணி நேரம் அடிக்கப்பட்டுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண் அவருடைய குடும்பத்தினரால் திரும்ப அழைத்து வரப்பட்டார். பின்னர் பஞ்சாயத்து உறுப்பினர்களால், பொதுமக்கள் முன்னனியில் அப்பெண் கட்டி வைத்து அடிக்கப்பட்டார். இரவில் மின்வெட்டு ஏற்பட்ட போது, வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண்ணை அவரது குடும்பத்தினர் தெரு முழுவதும் தேடியுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை கூறியபோது, எனக்கு அவள் எப்போது ஓடிப்போனாள் என்பது குறித்து எந்த விவரமும் தெரியாது. பஞ்சாயத்தில் தான் அந்த நபரை விரும்புவதாக அவள் கூறியது மட்டுமே தெரியும் என்றார். மேலும், எனது மகளுக்கு எனது சாதியைச் சேர்ந்தவர் தான் துணையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என அவர் கூறினார்.

அப்பெண், எந்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறினாரோ அவரே பெண்ணின் வீட்டாருக்கு தகவல் கொடுத்து வர வழைத்துள்ளார். அதன் பின்னரே கிராமத்தினர் அப்பெண்ணை அழைத்து வந்துள்ளனர்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................