This Article is From Oct 19, 2018

காவல்துறையில் 6,643 பெண் காவலர்களை நியமித்து பீகார் அரசு புதிய சாதனை!

பீகாரில் 6000 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆண் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு காரணம், உடல் தகுதி தேர்வில் வித்தியாசம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது

காவல்துறையில் 6,643 பெண் காவலர்களை நியமித்து பீகார் அரசு புதிய சாதனை!

இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாரளுமன்றத்தில் நிதிஷ் குமார் பெண்களுக்கு இட ஓதுக்கீடு வழங்க கோரினார்.

Patna:

பீகார் காவல்துறையில், 6,643 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் நித்திஷ் குமாரின் அரசாங்கம் புதிய சாதனை படைத்துள்ளது. ஆனால், இது ஆண் தேர்வர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், உடல் தகுதி தேர்வில் வித்தியாசம் காட்டப்பட்டதாக கூறியுள்ளனர்.

பீகாரில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலின் போது, ஜனதா தள கட்சியின் வாக்குறுதி அறிக்கையில், பெண்களுக்கு அரசாங்க வேலையில் 35 சதவீதம் இட ஓதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக பீகார் அரசாங்கம் தற்போது 6,000 பெண் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளது. மேலும் பஞ்சாயத்து தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடத்தினை வாங்கி கொடுத்துள்ளது. இதன் மூலம், பெண்களின் அரசியல் பயணத்திற்குக் அடித்தளமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

6000 பெண்களை காவலர்களாக தேர்ந்தெடுத்ததில் கோபமடைந்த ஆண் தேர்வர்கள், உடல் தகுதி முறையே பாரபட்சத்துடன் நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். ஆண் தேர்வர்கள் ஒரு கிலோமீட்டரை ஐந்து நிமிடத்திலும், பெண்கள் ஆறு நிமிடத்திலும் கடக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இதனால், 26,507 ஆண்களில் 8,178 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 16,252 பெண்களில் 14,384 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடல்தகுதி தேர்வில் பெண்களின் தேர்ச்சி விகிதம் 88.51 ஆக உள்ளதாக ஆண் தேர்வர்கள் கூறியுள்ளனர்.
 

.