This Article is From Feb 17, 2019

ட்ரக் – வேன் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

திருமணத்திற்கு சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

ட்ரக் – வேன் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

Siwan:

பீகாரில் ட்ரக் – வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சிவான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நேற்றிரவு நடந்திருக்கிறது. திருமணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு ஒரு குழுவினர் வேனில் சென்றுள்ளனர்.

அந்த வேண் சிவான் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ட்ரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

.