This Article is From Jan 10, 2019

உலக வர்த்தகத்தை அச்சுறுத்தும் சீனாவின் பொருளாதார வீழ்ச்சி!

சீன பொருளாதாரம், தனது பங்குச்சந்தையில் 25 சதவிகித சரிவை கண்டது. 2018ன் மிக மோசமான பங்குச் சந்தை பதிவாக இது அமைந்தது. 

உலக வர்த்தகத்தை அச்சுறுத்தும் சீனாவின் பொருளாதார வீழ்ச்சி!

பீஜிங்கிற்கு காத்திருக்கும் சவால் என்பது தற்போது வீழச்சியை தடுக்க வேண்டும் என்பதாகவே உள்ளது.

அமெரிக்க பொருளாதாராம் வீழ்ந்தால் கவலைப்பட தேவையில்லை. ஆனால் சீன பொருளாதாரம் வீழ்ந்தால் கவலைப்பட வேண்டும். இதுதான் இன்று உலக வர்த்தகத்தின் ஒரே குரலாய் உள்ளது. காரணம் சீன பொருளாதாரம், தனது பங்குச்சந்தையில் 25 சதவிகித சரிவை கண்டது தான். 2018ன் மிக மோசமான பங்குச் சந்தை பதிவாக இது அமைந்தது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக போர்தான் இதனை மேலும் மோசமாக்கியதாக கூறப்படுகிறது. சீன அரசும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வர தவறியதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த சரிவின் வீரியத்தை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு சரிவை சீனா சந்தித்ததில்லை. இந்த சரிவு அவர்களது ஜிடிபியில் 19 சதவிகிதமாகவுள்ளது. 

பீஜிங்கிற்கு காத்திருக்கும் சவால் என்பது தற்போது வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என்பதாகவே உள்ளது.  உலக பொருளாதாரத்துக்கும் இப்போது இதுதான் தேவைப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது லாப கணிப்பை  குறைத்துள்ளது.  மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை குறைந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. 

ஆப்பிள் தவிர, ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் மற்ற அனைத்து நிறுவனங்களும் மிகவும் பின் தங்கியுள்ளன. ஆனால் இது மட்டுமே உலகத்தின் பொருளாதார தேக்கத்துக்கு காரணமாகாது என்று குறிப்பிடப்படுகிறது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா சேர்ந்தால், சீனா 2000த்தில் செய்த உற்பத்தியைவிட 2.5 மடங்கு அதிகம் இரும்பை தயாரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

"இதற்கு பொருளாதாரத்தில் முன்பெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கும். அமெரிக்கா தும்மினால் உலகத்திற்கு சளி பிடிக்கும் என்று. ஆனால் இப்போது சீனாவை தான் அங்கு பொறுத்தி பார்க்க வேண்டும். 30 வருடங்களில் சந்திக்காத அளவுக்கு கார் விற்பனை சரிந்துள்ளது. இதனை அனைவரும் கவனிக்க வேண்டும். சீனாவின் பொருளாதார வீழ்ச்சி உலகை பாதிக்கும்" என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.