Bigg Boss : பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கும் பிரபல நடிகைக்கும் நிச்சயதார்த்தம்!! #Photos

மிக அதிகமாக பார்க்கப்படும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளில் பிரபலமான இந்த நிகழ்ச்சி இந்தியாவில் பாலிவுட்டை கடந்து தமிழிலிலும் காலடி பதித்துள்ளது.

Bigg Boss : பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கும் பிரபல நடிகைக்கும் நிச்சயதார்த்தம்!! #Photos

யூ டியூப் ட்ரெண்டிங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் பலமுறை முதலிடம் வகித்தன.

New Delhi:

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் டைட்டில் வின்னருக்கும் பிரபல நடிகைக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதனை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுவராசியம் என்னவென்றால் இந்த ஜோடிக்கு காதல் மலர்ந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில்தான். 

நெதர்லாந்தை சேர்ந்த ஜான் டிமோல் என்பர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் காட் ஃபாதர் ஆவார். அவரது மூளையில் உதித்த 'பிக் பிரதர்' என்ற நிகழ்ச்சி பிரபலம் அடைந்ததை தொடர்ந்து, அதனை 'செலிப்ரெட்டி பிக் பிரதர்' என்று நடத்த தொடங்கினர். 
 

:

ஹாலிவுட்டில் பிக் பிரதர் நிகழ்ச்சி வெற்றி பெற்றதால், இந்தியாவிலும் பாலிவுட்டில் 'பிக் பாஸ்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2006-ல் இருந்து இந்தியில் பிக்பாஸ் நடத்தப்படுகிறது. இதன்பின்னர், கன்னடம், வங்காளம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, தமிழ் மொழிகளுக்கு பிக் பாஸ் விரிவடைந்தது.:

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3-ல் முகென் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். கன்னடத்தில் நடந்த சீசன் 5-ல் பாடகரும் இசை அமைப்பாளருமான சந்தன் ஷெட்டி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது, போட்டியாளர்களாக இருந்த சந்தன் ஷெட்டிக்கும், பிரபல நடிகை நிவேதிதா கவுடாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 
:

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. நீல நிற ஷெர்வானியில் சந்தனும், அதே நிற லெஹிங்கா ஆடையில் நிவேதாவும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கினர். 

முன்னதாக பொதுநிகழ்ச்சி ஒன்றில், சந்தன் ஷெட்டி நிவேதிதாவுக்கு லப் ப்ரொபோசல் செய்தார். இந்த சம்பவமும் இணையத்தில் வைரலானது. தற்போது, நிச்சயதார்த்த போட்டோக்களை சந்தன், நிவேதிதாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

More News