பிக் பாஸ் மீது மீடு : தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தொகுப்பாளினி புகார்

ஹைதராபத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு ஈடாக பாலியல் ரீதியாக உதவிகளைக் கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிக் பாஸ் மீது மீடு : தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தொகுப்பாளினி புகார்

ஜூலை 21 அன்று பிக் பாஸ் தெலுங்கின் 3வது சீசன் தொடங்கவுள்ளது


Hyderabad: 

ரியால்டி ஷோவான பிக் பாஸ் தெலுங்கு மூன்றாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் ஹைதராபத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு ஈடாக பாலியல் ரீதியாக உதவிகளைக் கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் நிகழ்ச்சியின் நான்கு உறுப்பினர்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊடகவியலாலர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக பஞ்சாரா ஹில்ஸ் மூத்த காவல்துறை அதிகாரி கே.எஸ்.ராவ் தெரிவித்தார்.

”ஜூலை 13 மதியம் ஒரு மூத்த பத்திரிகையாளர் மற்றும் தொகுப்பாளரிடமிருந்து ஒரு  புகார் வந்தது. மார்ச் மாதம் பிக்பாஸ் தெலுங்கிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் முன் மூன்றாவது சீசனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்” என்று ராவ் தெரிவித்தார். 

பெண் தொகுப்பாளரும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டு ரியாலிட்டி ஷோவின் நான்கு உறுப்பினர்களை சந்தித்தார். புகாரில், அந்த சந்திப்பில் நான்கு பேரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் மேலும் இறுதிச் சுற்றில் தேர்வு செய்யப்படவேண்டுமென்றால் தங்கள் முதலாளியை திருப்திபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை 21 அன்று பிக் பாஸ் தெலுங்கின் 3வது சீசன் தொடங்கவுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................