பிக் பாஸில் இன்றைய பேசு பொருள் 'அபிராமியின் தலைமை'-யா?

'குறும்படம் இருக்கா பிக் பாஸ்?'

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிக் பாஸில் இன்றைய பேசு பொருள் 'அபிராமியின் தலைமை'-யா?

பிக் பாஸின் நேற்றைய நாள் சற்று ஆக்ரோசமாகவே இருந்தது. டாஸ்க் நடைபெற்ற நாட்களில் குளிர்ந்த தண்ணீர் போன்றிருந்த வீடு, நேற்று மீண்டும் கொதிநிலையை அடைந்துவிட்டது. 

டாஸ்க் முடிவடைந்தவுடன் முதல் வேலையாக மீராவின் மீது குற்றத்தை சாட்டி சம்பவத்தை துவங்குகிறார் மதுமிதா. அந்த குற்றச்சாட்டு என்னன,'எங்கிட்ட கவின் லாஸ்லியாவுக்கு சோறு ஊட்டுனதால சாக்ஷி கோச்சுக்கிட்டா அப்படினு சொன்னது மீரா!'. யெம்மா இதெல்லாம் ஒரு பிரச்னையா என்பது போல "அவ அப்படி சொன்னதுல உனக்கு என்னமா பிரச்னை?" என்று தண்ணீர் ஊற்றி ஆற்றி வைத்தார் சரவணன். மதுமிதாவின் பதிலோ,"கண்டிப்பா குறும்படம் இருக்கு" என்பதுதான். ஆமாம் மேம், இருக்கலாம், முதலில் 'நீங்க எங்க கிட்ட மீரா சொன்னா'னு சொல்லிட்டு 'என்கிட்ட சொல்ல, வேற யார்கிட்டையோ சொல்லிட்டு இருந்தா, நான் கேட்டேன்'னு சொன்னதுக்கு இருக்கலாம்.

'குறும்படம் இருக்கா பிக் பாஸ்?'

அந்த பிரச்னை அப்படியே முடிந்தது. 'ஐய்யோ வீடு ரொம்ப அமைதியா இருக்கே. இருக்க கூடாதே. போட்ற ஒரு வெடிகுண்ட!' என்பதுதான் பிக் பாஸ் அவர்களின் மனநினைவாக இருந்திருக்கும் போல. எப்போவும் திங்கட்கிழமை நடக்கும் பிக் பாஸ் டாஸ்க், இந்த வாரம் வெள்ளிக்கிழமையே நடந்தாச்சு. கடைசில அவர் எண்ணம் நிறைவேறிடுச்சு.

fb7737fgடாஸ்க் என்னனா, துரத்தி பிடுச்சு விளையாடுறதோட மாடுலேஷன். முனு பேருக்கும் வெல்க்ரோ ஜாக்கெட் கொடுக்கப்படும். அதுல ஒட்ற மாதிரி ஒரு பொருளும் கொடுக்கப்படும். டாஸ்க் ஆரம்பிச்சதும், அந்த பொருளை யாரவது மீது ஒட்டனும். அவர்கள், மீண்டும் மற்ற இருவரை துரத்தி பிடுச்சு அந்த பொருளை அவர்களோட வெல்க்ரோ ஜாக்கெட்ல ஒட்டனும். டாஸ்க் பசர் அடிச்சதும் யார் ஜக்கெட்ல அந்த பொருள் இருக்கோ அவங்க அவுட். இதுதான் கேம்.

முதல் மோகனால் துரத்தப்பட, சந்தோசமாக விளையாடிக்கொண்டிருந்தார் வனிதா. பசர் அடிக்கையில் அந்த பொருள், மோகனின் கைகளில் இருந்தது, அவர் அவுட். அடுத்து போட்டி சாக்ஷி - வனிதா இடையே. தன் கைகளில் இருந்த அந்த பொருளை, எப்படியோ துரத்திப்பிடித்து வனிதாவின் ஜாக்கெட்டில் ஒட்டிவிட்டார் சாக்ஷி. வனிதா, மீண்டும் சாக்ஷியை துரத்த அவரால் பிடிக்க முடியவில்லை. 

7bih9dhg


உடனே, இந்த விளையாட்டு நியாயமற்றது என்று விளையாட மறுத்துவிட்டார். அந்த இடத்தில் தர்ஷன்,"மோகன் அப்பா, துரத்த கஷ்டப்பட்டபோது இது நியாயமற்றது என உங்களுக்கு தெரியவில்லையா?' என கேள்வி எழுப்ப, 'நீ இந்த விளையாட்டிலேயே இல்லை, நீ பேசாதே' என வனிதா கூற, பிரச்னை பூதாகரமடைந்தது. ஒரு வழியா, உங்க எண்ணம் நிறைவேறிவிட்டதா பிக் பாஸ்?

முன்னதாக மீரா நட்பை பற்றி பேச, அங்கேயும் நட்புனா என்னனு தெரியுமா என்று மீராவை 'லெப்ட் ரைட்' வாங்கினார் தர்ஷன். மொத்தத்தில், நேற்று வீட்டில் தர்ஷன், 'தக் லைப்' தர்ஷனாகவே வலம் வந்தார். அக்வாமேன் படத்தில், அக்வாமேன் போரின் நடுவே ரொமேன்ஸ் செய்வதுபோல, இங்கே தர்ஷன் சண்டை முடிந்தவுடன் செரினுடன் ரொமேன்ஸ்.

முடிவில் சாக்ஷி வீட்டின் தலைவியாகியாச்சு, குக்கிங், கிலீனிங், பாத்ரூம் கிலீனிங், பாத்திரம் கலுவுதல் என அந்த அந்த பணிக்கு ஆட்களும் பிரிக்கப்பட்டாச்சு. 

சரி, இன்று என்ன?

கமலின் வருகை. இன்று கமல் எதை பற்றியெல்லாம் பேசப்போகிறார்?

மக்களிடம் கேட்டால், மக்களின் முதல் கோரிக்கை வனிதாவின் டாமினேஷன் பற்றி பேசுங்க என்றுதான் சொல்வார்கள். இந்த வாரம் முழுவதும் இவரின் டாமினேஷன்-தான். தான் பேசும்போது மற்றவர்கள் குறிக்கிடாமல் கேட்க வேண்டும், ஆனால், மற்றவர்கள் பேசும்போது தான் குறிக்கிடாமல் இருக்க மாட்டேன் என்ற எதிர்மறை கொள்கைகளை கொண்டுள்ளார். 

மற்றொரு, பேசுபொருளாக அபிராமி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில், கேப்டனாக சில செயல்களை செய்தாலும், டாஸ்க் துவங்கியவுடன் தான் அந்த பொருப்பில் இருப்பதை மறந்துவிட்டார் போல. இவர் தன் ஆளுமையை வெளிக்காட்ட வேண்டும் என்றுதான் தர்ஷன், கேப்டன் பதிவியை அபிராமிக்கு விட்டுக்கொடுத்தார். அந்த வாய்ப்பை அபிராமி சரியாக பயன்படுத்தவில்லையோ என தொன்றுகிறது.

அடுத்து என்ன, எளிமினேஷன்!

எப்போது, சனிக்கிழமை ஹைப் கொடுத்து, யார் வெளியேறப்போகிறார் என்பதை ஞாயிற்றுக்கிழமையன்று அறிவிப்பார், கமல். இன்றும் அதையே எதிர்பார்க்கலாம்.

இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றிருப்பது, மதுமிதா, சரவணன், மீரா மிதுன், வனிதா மற்றும் மோகன் வைத்தியா ஆகியோர்தான்.

யார் வெளியேறினால்ம் வீடு அமைதியாக இருக்கும், கமென்ட்களில் உங்கல் கருத்துகளை பதிவிடுங்கள்!

-சு முரளிசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................