'சரவணன்தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்' - கதறி அழும் கவின், சாண்டி!

Bigg Boss 3, Day 44 Highlights: சரவணன் பேருந்து சர்ச்சை காரணமாக திங்கட்கிழமை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
'சரவணன்தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்' - கதறி அழும் கவின், சாண்டி!

Bigg Boss House, Seson 3 Tamil: சரவணன் வெளியேற்றத்தால் வருத்தத்தில் கவின், சாண்டி


Bigg Boss Tamil Season 3, Day 44: பிக் பாஸ் வீட்டின் 44வது நாளில், அந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. 'தன் கையே தனக்குதவி'. டாஸ்க் பஸர் அடித்ததும், வீட்டின் கார்டன் ஏரியாவில் 20, 50, 100 என புள்ளிகள் குறிப்பிடப்பட்ட காயின்கள் தூக்கி எறியப்படும். அனைவரும் அந்த டாஸ்க்கில் பங்கேற்று அங்கு எறியப்படும் காயின்களைப் பிடிக்க வேண்டும். டாஸ்க்கின் முடிவில் யார் அதிக புள்ளிகளை வைத்திருக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். மேலும், அவர்களை அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் நாமினேட் செய்ய முடியாது. டாஸ்க் முடிவில் 1060 புள்ளிகளுடன் சாண்டி முதலிடம், 890 புள்ளிகளுடன் சரவணன் இரண்டாவது, 810 புள்ளிகளுடன் தர்ஷன் முன்றாவது இடம் என்பதும் அறிவிக்கப்பட்டது. 

டாஸ்க் முடிந்ததும், அனைவரும் அங்கங்கே அமர்ந்து தன் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சரவணன் எந்த ஒரு பெரிய கவனிப்பும் இன்றி கன்பெஷன் ரூமிற்குள் அழைக்கப்பட்டார். உள்ளே சென்ற சரவணன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இது அங்கிருந்த அனைவரிடத்திலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், சரவணன் வெளியே வந்துவிட்டாரா? என இரண்டு பேரின் மனம் மட்டும் அங்கு இருந்தது. கவின் (Kavin), சாண்டி (Sandy), இருவரும் எதோ தவறாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரையும் உள்ளே அழைத்த பிக் பாஸ்,"சரவணன் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டார்" எனக் கூறுகிறார். சரவணன் (Saravanan) என்று சொன்ன அந்த நொடியிலேயே இவர்கள் இருவர் கண்ணிலும் கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அவர்கள் அழுகை எப்படி இருந்தது என்றால் அதைப் பார்க்கும் நமக்கே அழுகை வந்துவிடும். ஒருவரின் பிரிவு இவ்வளவு அழுகையைத் தருமா?

வெறும் நாற்பது நாட்கள் பழக்கம்தான் என்றாலும் அவர்களிடையேயான உறவு எப்படி இருந்தது என்பதை அந்த அழுகை உணர்த்தியிருக்கும். இவர்கள் அவரின்மீது வைத்திருந்த பாசம் எந்த அளவிற்கு அதிகமானது என்றால், அடுத்த வாரம் அவரை யாரும் நாமினேட் செய்துவிடக்கூடாது என்பதற்காக, தான் எடுத்த புள்ளிகளை அவருக்கு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு தெரியாது அல்லவா, இப்படி சரவணன் வெளியேற்றப்படுவார் என்று. அவர்கள் அழும்போதுகூட, "தான் வெற்றி பெற வேண்டும் என அவர் நினைக்கவில்லை. எங்களை மேலே ஏற்றிவிட்டு அவர் வெளியேறிவிடுவார் என்றுதான் எப்போதும் சொல்வார்" எனக் கூறி அழுதார்கள்.

தங்களுடைய உயிர் நண்பர் யார் என்று அனைவரிடமும் பிக் பாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது சாண்டி, "நான் இந்த அளவு நெருக்கமாக யாரிடமும் இருந்ததில்லை. என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் சரவணன் அண்ணாதான்" எனக்கூறி உடைந்த தருனம், கவின், "நான் சிறு வயதிலிருந்து என் மாமா பேச்சை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அவர்தான் சிறு வயதிலிருந்து என்னை எடுத்து வளர்த்தது, அதனால். ஆனால், இங்கு வந்த சில நாட்கள் மட்டுமே ஆகியிருந்தாலும் நான் சரவணன் அண்ணாவுடைய பேச்சைக் கேட்கிறேன்" என்று கூறிய சொற்கள் இவர்கள் இருவருக்கும் சரவணன் எவ்வளவு முக்கியமான ஒருவர் என்பதை உணர்த்துகிறது.

எப்படி இருந்தாலும், சரவணன் இல்லை என்பது இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் பலருக்கும் ஒரு பெரிய இழப்பாகத்தான் இருக்கும் என்பதை நேற்றைய பிக் பாஸ் தொகுப்பு உணர்த்துகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................