வனிதா பத்த வச்ச தீ, இப்பொ காட்டு தீயா மாறிடுச்சு - சாண்டி எதைக் கூறுகிறார்?

Bigg Boss 3 Tamil: மதுமிதா தவிர்த்து இந்த வார எளிமினேஷனில் கவின் (Kavin), முகென் (Mugen), லாஸ்லியா (Losliya), அபிராமி (Abirami) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வனிதா பத்த வச்ச தீ, இப்பொ காட்டு தீயா மாறிடுச்சு - சாண்டி எதைக் கூறுகிறார்?

Bigg Boss 3 Madhumitha: கவின், முகென், லாஸ்லியா, அபிராமி ஆகியோரில் வெளியேறப்போவது யார்?


Bigg Boss 3 Tamil: முன்னதாக நேற்று மதுமிதா (Madhumitha) பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். நாமினேஷனில் அவர் இருந்திருந்தாலும் அந்த காரணங்களுக்காக அவர் வெளியேற்றப்படவில்லை. பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறியதற்காக அவர் வெளியேற்றப்பட்டார். முன்னதாக் வீட்டின் நடந்த தொடர் பிரச்னைகளுக்குப் பிறகு, அவற்றில் ஏற்பட்ட மனக்குழப்பம் காரணமாக மதுமிதா தன் கைகளை அறுத்துக்கொண்டார். இது பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளுக்கு எதிராக இருந்த காரணத்தால், அவர் வெளியேற்றப்பட்டார்.

மதுமிதாவின் இந்த செயல், அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கமல் (Kamal Hassan), சேரன் (Cheran), "இது ஒரு தவறான முன் உதாரணம்" என்று மதுமிதா மீது குற்றமும் சாட்டினார்கள்.

மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, அரகத்திற்குள் சென்ற கமல் இருக்கும் பிரச்னைகளை, வனிதா (Vanitha) பற்ற வைத்த பிரச்னைகளை, அப்பத்டிதான் சாண்டி (Sandy), லாஸ்லியா (Losliya) உட்பட வீட்டில் இருந்த அனைவரும் குறிப்பிட்டார்கள், அந்த அனைத்து பிரச்னைகளையும் பேசத்துவங்கினார். வீட்டில் எழுந்த அனைத்து பிரச்னைகளுக்கும் துவக்கப்புள்ளியாக இருந்தது வனிதா" இந்த வார்த்தைகளை வீட்டு மக்களிடம் இருந்து எதிர்பார்த்த கமல், அந்த வார்த்தைகள் வரும் வரை கேள்விகளை அடுக்கினார்.

சாண்டி இதைப் பற்றி கூறுகையில், வனிதா இங்க கொஞ்சம் அங்க கொஞ்சமாக பற்ற வைத்துவிட்டு சென்று விடுகிறார், ஆனால் அது காட்டுத் தீயாக வீட்டில் பரவிவிட்டது என்று கருத்து கூறியிருந்தார். 

ஐவர் கூட்டணி, கஸ்தூரி (Kasthuri), கவின் (Kavin) என அனைவரிடமும் அவர்களுடைய பிரச்னைகளை கேட்டறிந்தார். 'ஏன் அனைத்து இடத்திலிருந்தும் இந்த ஐவர் மொத்தமாக எழுந்து நகர்ந்துவிடுகிறீர்கள்?' என்ற கேள்வியை கவினிற்கு முன்வைத்தார் கமல். அனைவரும் ஒரு பிரச்னையை திரும்பத் திரும்ப பேசி தங்களை கோபத்தின் உச்சத்திற்கு எடுத்துச் செல்வதாகவும், பேச எந்த பிரச்னையும் இல்லை என்றால் பழைய பிரச்னைகளை கிளப்புவதாகவும் தன் பக்க நியாயத்தை வைத்தார் கவின்.

இந்த வாரம் மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்த வாரம் எளிமினேஷன் இருக்காது என்று சந்தோஷமாக இருந்த போட்டியாளர்களுக்கு 'இருக்கு எளிமினேஷன் இருக்கு' என்று ஷாக்கும் கொடுத்தார். நாமினேஷனில் இருந்த ஒருவர் வெளியேறிவிட்டதால் எளிமினேஷன் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள் என கமல் எச்சரித்தார். மதுமிதா தவிர்த்து இந்த வார எளிமினேஷனில் கவின் (Kavin), முகென் (Mugen), லாஸ்லியா (Losliya), அபிராமி (Abirami) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக நேற்று, வனிதா பேசுவதற்கான வாய்ப்பை மக்கள் அவருக்குத் தரவில்லை. அவர் பேச வாயைத் திறந்தாலே, மக்களும் கத்த வாயை திறந்துவிட்டார்கள். கமலும் வேறு வழியில்லாமல் 'கொஞ்சம் ஆறப்போட்டு உங்கப் பிரச்னையை நாளைக்குப் பேசுவோம்' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அதன்படி இன்றைய பிக் பாஸில் எளிமினேஷன் மட்டுமல்ல, சில சிறப்பான சம்பவங்களும் இருக்கு!சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................