'என்னோட நாமினேஷன் சேரன் அப்பா' - லாஸ்லியாவின் முடிவை ஆதரிக்கும் நெட்டிசன்கள்!

Bigg Boss Tamil 3: இந்த வாரத்தின் நமினேஷனில் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'என்னோட நாமினேஷன் சேரன் அப்பா' - லாஸ்லியாவின் முடிவை ஆதரிக்கும் நெட்டிசன்கள்!

Losliya, Cheran; Bigg Boss Tamil 3 Contestants: சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா


Bigg Boss Tamil 3 Nomination: பிக் பாஸ் 8 வாரங்களை கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா (Fathima), வனிதா (Vanitha), மோகன் வைத்தியா (Mohan Vaidya), மீரா (Meera Mithun), ரேஷ்மா (Reshma), சாக்க்ஷி (Sakshi Agarwal), அபிராமி (Abirami) என 7 பேர் எளிமினேட் ஆகியுள்ளனர். சர்ச்சைக்குறிய கருத்துகளை பதிவு செய்ததற்காக சரவணன் (Saravanan) வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக கஸ்தூரி (Kasthuri) உள்ளே அனுப்பப்பட்டார். அதன்பின் முன்னதாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வனிதா, மீண்டும் போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பப்பட்டார். பிக் பாஸ் வீடு இப்படி ஒரு ஏற்றதாழ்வுடன் 9வது வாரத்தில் இன்று அடி எடுத்து வைக்கிறது.

வழக்கமாக, வாரத்தின் முதல் நாளில், அந்த வாரம் யார் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நாமினேஷன் நடைபெறும். அவ்வாறு இன்று நடைபெற்ற நாமினேஷனின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓருபுறம், அறைக்குள் லாஸ்லியா (Losliya) சேரனை நாமினேட் செய்து கொண்டிருக்கிறார். மறுபுறம் எப்போது லாஸ்லியா என்னை நாமினேட் செய்யமாட்டாள் என்று சேரன் (Cheran) வெளியே அமர்ந்து ஆணித்தனமாக கூறிக்கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம், சேரன் லாஸ்லியாவின் அப்பா-மகள் உறவு இடையே பெரும் பிளவு ஏற்பட்டது. நேற்று அந்த பிரச்னைகளை பற்றி இருவரும் பேசித் தீர்த்திருந்தாலும், இன்னும் ஒரு தெளிவு இன்மையிலேதான் இருவரும் இருக்கிறார்கள். ஆனால், அந்த தெளிவின்மை நாமினேஷன் வரை செல்லும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த பிக் பாஸ் தொடரிலியே, யாரும் எதிர்பார்த்திராதா நாமினேஷனாக, லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தது இருக்கும். 

இவரது இந்த கருத்திற்கு அதிருப்திகள் எழுந்தாலும், லாஸ்லியா செய்தது சரிதான், சரியான முடிவை லாஸ்லியா எடுத்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் அதரவான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். இதுபற்றி ஒரு நிகழ்வை நினைவு கூற, சென்ற வாரத்தில் சாண்டி (Sandy), வனிதா (Vanitha) பேசுவதற்கு டப்பிங் கொடுத்துக்கொண்டிருக்க அங்கிருந்த சேரனுக்கும் டப்பிங் கொடுத்தார். அப்போது, அவரை விட்டிருங்க என்றார் லாஸ்லியா. ஆனால், அதே நேரத்தில் சேரன் லாஸ்லியாவை பற்றி உள்ளே பேசிக்கொண்டிருந்தார். இப்போதல்ல, அப்போதே இரு வேறு துருவங்களை இந்த உறவு சந்தித்துவிட்டது.

முன்னதாக நேற்று, சேரன் தூங்க சென்றபோது, லாஸ்லியாவிடம் 'குட் நைட்' சொல்லிவிட்டு உறங்க சென்றார். இதுவும் ஒரு பிரச்னையாக இருந்தது. முன்னெல்லாம் சேரன் உறங்க செல்லும்போது லாஸ்லியாவிடம் சொல்லிவிட்டு தான் உறங்க செல்வார். இந்த வாரத்தில் சேரன் லாஸ்லியாவிடம் சொல்லாமலேயே உறங்க சென்றிருப்பார் போல. நேற்று, லாஸ்லியா இது பற்றி சேரனிடம் கேட்டார். பின்னர் அதுபற்றி விவாதித்த சேரன், நேற்று தூங்க செல்கையில் லாஸ்லியாவிடம் 'குட் நைட்' சொல்லிவிட்டு சென்றார். அப்போது கவின், 'இந்த ட்ராமாவ பாக்க முடியல' என்று லாஸ்லியாவிடம் கூறினார்.

நேற்று சேரனிடம் லாஸ்லியா பேசுகையில், பல பிரச்னைகள் பற்றி விவாதிக்கவில்லை. லாஸ்லியாவிற்கு சேரனிடம் இன்னும் பெரிய மனக்கசப்புகள் உள்ளது என்பது கவின்-லாஸ்லியாவின் உரையாடலின் வழியாக தெரிகிறது.

லாஸ்லியாவின் இந்த செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................