முதல்ல கவின், அடுத்து அபிராமி, இதுதான் சாக்க்ஷியின் கேம் ப்ளானா?

இந்த வார நாமினேஷனில், அபிராமி, சாக்க்ஷி மற்றும் லாஸ்லியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
முதல்ல கவின், அடுத்து அபிராமி, இதுதான் சாக்க்ஷியின் கேம் ப்ளானா?

நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து ரேஷ்மா வெளியேறிய வருத்தத்தில் முகேன் அமர்ந்திருந்தார். அவருக்கு ஆறுதலாக சாக்க்ஷி, செரினுடன் அபிராமியும் அமர்ந்திருந்தார். அப்போது சாக்க்ஷி ஒரு கேள்வியை முன் வைத்தார். "நான் முகேனுடன் பேசுவதில் உனக்கு எதாவது பிரச்னையா?" என்ற கேள்வியை அபிராமியிடம் சாக்க்ஷி கேட்டார். ரேஷ்மா வெளியே சென்ற கவலையில் இருக்கும்போது இது போன்ற ஒரு கேள்வி அவசியமா என்பது போல பதிலளித்தார் அபிராமி. சாக்க்ஷி தொடர்ந்து அதுபற்றி கேட்க அழுத வண்ணம் உள்ளே சென்றார் அபிராமி.

உள்ளே சென்ற அபிராமி நடந்ததை லாஸ்லியாவிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார். அடுத்து உறங்கும் அறையில் தன் படுக்கை அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தபோது, முகேன் அபிராமியை சமாதானப்படுத்த உள்ளே சென்றார். அபிராமி தொடர்ந்து அழுக, கோவத்தில் அருகில் இருந்த கட்டிலை குத்து உடைத்துவிட்டார். அந்த சத்தம் கேட்டதும் அனைவரது கவனமும் இங்கு திரும்பியது. 

இந்த செயல் அனைவரது கவணத்தையும் அபிராமியின் மீது திருப்பியது. அனைவரும் அபிராமியின் இந்த செயல் தவறு எனக் கருதினார்கள். இதுதான், இந்த வார நாமினேஷனில் அபிராமி இடம்பெறவும் காரணமாக அமைந்தது. 

இந்த பிரச்னை முடிந்தவுடன் பாத்ரூம் பகுதியில், அபிராமி சாக்க்ஷியிடம் மன்னிப்பு கேட்க, நாம் இருவரும் நல்ல நண்பர்கள், இந்த விஷயத்தை இங்கே மறந்துவிடலாம். இதனால் நம் நட்பு பாதிக்கப்படக்கூடாது என்பது போல பதிலளித்தார் சாக்க்ஷி. அதன்பின் நாமினேஷனில் இதே காரணத்தை கூறி, அபிராமியை நாமினேட் செய்தார். 

சென்ற வார நாமினேஷனின்போதும் இதே சம்பவம்தான் அரங்கேறியது. அப்போது, அபிராமியின் இடத்தில் இருந்தது கவின். கவின் தன் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என அனைவரின் முன்பு அழுதார். பின் கவினிடம் தனியாக பேசி கவின் மன்னிப்பு கேட்க, அனைத்தையும் மறந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என சாக்க்ஷி கூறியிருந்தார். ஆனால், அந்த வார நாமினேஷனில் இதே காரணத்தை கூறி சாக்க்ஷி கவினை நாமினேட் செய்தார். கவினை அந்த நாமினேஷனில் தேர்வு செய்த பலரின் காரணம் இதுவாகவே இருந்தது. 

மக்களிடையே கவினிற்கு நல்ல ஆதரவு இருந்த காரணத்தினால் கவின் பாதுகாக்கப்பட்டார். ஆனால், அபிராமி?

இந்த இரண்டு சம்பவங்களை தொடர்புப் படுத்தி பார்க்கையில், சாக்க்ஷியின் 'கேம் ப்ளான் இதுதானோ என்று மக்களைவ் சிந்திக்க வைக்கிறது.

இந்த வார நாமினேஷனில், அபிராமி, சாக்க்ஷி மற்றும் லாஸ்லியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சரவணனின் பெயரும் இந்த பட்டியலில் இருந்தது. ஆனால், பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பயணிப்பேன் என சரவணன் கூறியதை அடுத்து, எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அவர் வெளியேற்றப்பட்டார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................