This Article is From Aug 01, 2019

பிக் பாஸ் 38வது நாள்: கார்னர் செய்யப்படுகிறாரா கவின்?

பிக் பாஸ் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் முடிவடைந்ததும், மொட்ட கடுதாசி என்ற டாஸ்க் ஒன்றை அறிவித்தார்.

பிக் பாஸ் 38வது நாள்: கார்னர் செய்யப்படுகிறாரா கவின்?

சாக்க்ஷியின் அழுகையுடனே அன்றை நாள் துவங்கியது. தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும், தன்னை வெளியே விடும்படியும் கேமராவை பார்த்து அழுது கொண்டிருந்தார். 

23r4hbj8

எப்போதும் காலையில் ஒலிக்கும் பாடல்களுடன், இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்கான பாட்லகளும் ஒலித்தன. அபிராமி, முகேன், தர்ஷன் கடைசியான மொத்த குடும்பம் என அனைவரும் ஆட்டமாட இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் முடிவடைந்தது. டாஸ்கிற்கும் காலை பாடலுக்கும் நடுவே பிக் பாஸ் வீட்டின் மற்ற மக்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்தார் மதுமிதா.

8ovgrndo

"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" என்னும் பாடலுக்கு அபிராமி, நட்டியம் ஆடினார்.

go12eitg

"ஆடுங்கடா என்ன சுத்தி" பாடலுக்கு ஓடி வந்து டேன்ஸ் ஆடினார் முகேன். 

r8gu744g

"இளமை இதோ! இதோ!'' பாடலுக்கு ஆட்டம் போட்டார் தர்ஷன். 

1qdc103o

தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடலுக்கு தமன்னாவும் ஆட்டமாடினார். தமன்னா என்றால், இந்த வார டாஸ்கில் தமன்னாவாக இருந்த சாக்க்ஷி. 

ro33cjng

கடைசியில குரூப் சாங், "ஊத்திக்கினு கடுச்சுக்கலாம்". இந்த பாடலுக்கு மொத்த குடும்பமும் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டது.

சரி, லக்சரி பட்ஜெட் டாஸ்க் முடிந்தது. வழக்கமாக, வீட்டில் இம்மாதிரியான டாஸ்க்கின்போதே சண்டை வந்துவிடும். ஒருவேளை, அம்மாதிரி சண்டை நடக்கவில்லை என்றால், 'டாஸ்க்' என்ற யுக்தியை பிக் பாஸ் கையாள்வார். அந்த வகையில் இம்முறை, பிக் பாஸ் அறிவித்த டாஸ்க்தான் 'மொட்ட கடுதாசி'. தங்கள் பெயரை குறிப்பிடாமல் வீட்டில் உள்ளவர்கள், மற்ற ஏதாவது இரண்டு நபர்களிடம் ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த டாஸ்க்.

ebiqkmu8

அனைவரும் உள்ளே சென்று, தங்கள் கேள்விக் கணைகளை தொடுத்தனர். 

அந்த டாஸ்க்கில் சேரனை நோக்கி தன் கேள்வியை முன்வைத்த சரவணன், "நீங்கள் சினிமா துறையில் நுழைந்ததிலிருந்தே நல்ல பெயரையும் புகழையும் விருதுகளையும் பெற்றுவிட்டீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதைவிடவா, பெயரையும் புகழையும் பெற்றுவிடப்போகிறீர்கள். இது எதை நோக்கிய பயணம்?" என்று கேள்வி கேட்டிருந்தார்.

அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது,"விஜய் சேதுபதிதான் 'இந்த எடத்துக்கு போங்க' என்று என்னை இங்க அனுப்பி வச்சார்." என்று சேரன் குறிப்பிட்டார். "சார் நம்ம வந்து நாளு வருசம் கேப் விட்டுட்டோம். ஒன்னு, இப்போ உள்ள அடுத்த தலைமுறைக்கு உங்களை தெரியனும். ரெண்டு, எல்லா கிராமங்களையும் மக்கள் இந்த பிக் பாஸ் பாக்குறாங்க. நீங்க 35 வருசம் விழுந்து எந்திரிச்சு, விழுந்து எந்திருச்சு வந்த அத்தனை அனுபவமும் அவங்களுக்கு பாடம்" என விஜய் சேதுபதி கூறி பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னை அனுப்பி வைத்ததாக சேரன் குறிப்பிட்டார்.

4bk2f2qo

முகேனிடம் உங்கள் உண்மையான ரூபம் என்ன? கைவினை பொருட்கள் செய்வது, அபிராமியிடம் பேசுவது தவிர்ந்து உங்கள் குணம் என்ன எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான காரணங்களையும், தன் சிதைக்கப்பட்ட குழந்தை பருவத்தை பற்றியும், தன் ஆசை பற்றியும் கண்ணீருடன் விவரித்தார் முகேன்.

9a78tplo

இந்த கேள்வியை தவிர்த்து, பெரும்பாலும் கேள்விகள் கவின், சாக்க்ஷி, லாஸ்லியாவை மையமாக வைத்தே சுற்றி வந்தது. கவின் இதுவரை லாஸ்லியா மற்றும் சாக்க்ஷியிடம் மட்டுமே தன் பக்க நியாத்தை கூறியிருந்தார். இந்த டாஸ்க்கை பயன்படுத்து, சாக்க்ஷி - கவின், இருவரிடையே என்ன நடந்தது என்பதை முகழுவதுமாக விவரித்தார். 

sijvqjfg

லாஸ்லியாவிற்கு, முதல் வாரங்களில் சந்தோசமாக ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தீர்கள், ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணரப்படுகிறது, அதற்கான காரணம், போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விகளுக்கான பதில்களை லாஸ்லியா தந்தார்.

muphgbsg

அந்த பிரச்னை அங்கேயே முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாக்க்ஷியின் கண்ணீர் ஓய்வதாக இல்லை. இன்று அந்த அழுகை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இன்று வெளியான ப்ரோமோக்களை வைத்துப் பார்க்கையில், அந்த பிரச்னை, இவர்கள் மூவரிடையேயான பிரச்னைதான், இன்றைய நாள் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் வலம் வந்துகொண்டிருந்ததாக தெரிகிறது. மொத்த குடும்பமும் இன்றைய பிக் பாஸில் கவினிற்கு எதிராக கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். சென்ற வாரம், கமல் பேசுகையில், மக்களிடையே கவினிற்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை நாம் பார்த்திருப்போம். இதன் விளைவாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கவின் கார்னர் செய்யப்படுகிறாரா அல்லது உண்மையிலேயே கவின் மீது தவறு உள்ளதா, பிக் பாஸின் வரும் வாரங்கள் பதில் சொல்லும்!

ஆனால் பிக் பாஸ், ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன், 'இந்த வாரத்துக்கு இது போதும்'!

.