பிக் பாஸ் 25வது நாள்: கவின், ரெண்டு பேர் கிட்டையும் பேசாம இருந்திருங்க!

'ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க! பேரு கெட்டு போனதுனா நம்ம பொழப்பு என்னாகுங்க!' என பாடல் போட்டு அறிவுரை சொல்ல நினைக்கிறார் போல. அவங்க விட்டாலும் நீங்க விடமாட்டீங்க போல!

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிக் பாஸ் 25வது நாள்: கவின், ரெண்டு பேர் கிட்டையும் பேசாம இருந்திருங்க!

24வது நாள் இரவு 9:20 காட்சிகளுடனேயே நேற்றைய பிக் பாஸ் துவங்கியது. அந்த பேச்சுவார்த்தை முடிவு பெருவதாக இல்லை. சாக்க்ஷியுடன் பேசிக்கொண்டிருந்த கவின். ஒரு கட்டத்தில் 'எதோ ஒன்னு இருக்கு தான?' என சாக்க்ஷி கேட்க, 'அப்படி ஒன்னுமே இல்லை' என கவின் கூறிவிட்டார். உடனே பாத்ரூமிற்குள் சென்ற சாக்க்ஷி அழுகத்துவங்கிவிட்டார். அதன்பின் செரின் வந்து ஆருதல் படுத்த சாக்க்ஷி சற்று மனம் தேர்ந்தார். ஆனால் அந்த பிரச்னை ஒய்ந்ததாக இல்லை. பேச்சு தொடர்ந்துகொண்டே இருந்தது.

இரவு லாஸ்லியா உறங்காமல் வெளியே அமர்ந்துகொண்டிருந்தார். கவின், சாக்க்ஷியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். கடைசி வரை சாக்க்ஷி சமாதானமாகவில்லை. கவின் வருத்தத்தில் வெளியே வர, அங்கு அமர்ந்துகொண்டிருந்த லாஸ்லியாவிடம் பேசிக்கொண்டிருக்க, அந்த சமையத்தில் வெளியே வந்த சாக்க்ஷியின் கண்களுக்கு இது தென்படுகிறது. அதுக்கு அப்புறம் என்ன ஆகியிருக்கும்னு சொல்லனுமா என்ன?

msu5tdj8

கவின், நீங்க ரெண்டு பேர் கிட்டையும் விளையாட்டுக்குதான் பேசுறீங்க, நட்பாதான் பேசுறீங்க. அது என்னமோ சொன்னாங்களே, ஆஆஆ! பொசெசிவ்னஸ், கவின் சாக்க்ஷி கிட்ட பெசுனா, லாஸ்லியாவிற்கு பொசெசிவ்னஸ், கவின் லாஸ்லியா கிட்ட பேசுனா, சாக்க்ஷிக்கு பொசெசிவ்னஸ். இந்த பொசெசிவ்னஸ், ஒரு சாக்லேட் பிரச்னையை இவ்வளவு பேருசா மாத்திருச்சு. ஒன்னு பண்ணுங்க கவின், பேசாமா, ரெண்டு பேர் கிட்டையும் பேசாம இருந்திருங்க!

அந்த நாள், சற்று நீண்ட நாளாகவே இருந்திருக்கும். ஏனென்றால், சுமார் 2 மணிவரை நீண்டது.

பிக் பாஸ் ரொம்ப குசும்புக்காரர் என்பதை, காலை பாடலின் மூலம் நிருப்பிக்கிறார். 'ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க! பேரு கெட்டு போனதுனா நம்ம பொழப்பு என்னாகுங்க!' என பாடல் போட்டு அறிவுரை சொல்ல நினைக்கிறார் போல. அவங்க விட்டாலும் நீங்க விடமாட்டீங்க போல!

bn7gho2

வழக்கம்போல, மீரா அரம்பிக்கிறார். சாக்க்ஷியிடம் படுக்கை அறையை சுத்தம் செய்ய சொல்கிறார். 'நேத்து நைட் டேபிள் கிளீன் பண்ணீங்களா?' என சாக்க்ஷி கேட்க 'இல்லை' என்றார் மீரா. ஏன் செய்யவில்லை என்று கேட்டால்,'நான் கிளீனிங் டீம் கேப்டன். நான்தான் யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் பிரித்துகொடுக்க வேண்டும்' என கூறினார். இந்த விவாதம் வெகு நேரம் நீண்டது. நீங்கள்தான் கிளீனிங் டீம் கேப்டன். நீங்கள்தான் யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் பிரித்துகொடுக்க வேண்டும். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், உங்கள் வேலை நீங்கள் சரியாக செய்ய வேண்டும் அல்லவா?

n32frp88

அனைவரிடமும் சண்டை போட்டு அனைவரும் தன்னை கார்னர் செய்வது போன்ற ஒரு தோற்றத்தை மீரா உருவாக்க நினைக்கிறாரா, என மக்கள் அனைவரும் யோசித்துக்கொண்டிருக்க, மீரா இம்மாதிரியான செயல்களை மீண்டும் மீண்டும் செய்வது அதை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. வீடு சற்று அமைதியாக இருந்த நேரத்தில் சிறைக்குள் சாக்க்ஷியுடன் இருந்த மீரா, மீண்டும் ஒரு பழைய பிரச்னையை தோண்டி எடுக்கிறார். இம்முறை, விவாதம் அந்த டாஸ்க் பற்றிய விவாதம். (அட அந்த பிரச்னைதான செத்துப்போச்சே என நீங்கள் யோசிப்பது நன்றாக தெரிகிறது.). கவினிடம் ஆரம்பித்து, கடைசியில் நீ ஏன் என்ன லூசுனு சொன்ன என்ற கேள்வியில் விவாதம் துவங்கியது. மீண்டும் சாக்க்ஷியுடன் ஒரு பெரிய விவாதத்தை மேற்கொள்கிறார் மீரா.

ஏன் மீரா இப்படி செய்றீங்க?

ஆமா, இவங்க எப்போ ஜெய்லுக்கு போனாங்க?

இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளர்கள் யார் என்ற பிக் பாஸ் கேள்விக்கு சரவணன், தர்ஷன், ரேஷ்மா ஆகியார் கை காட்டப்பட்டனர். அதே நேரம், சரியாக பங்குபெறாத போட்டியாளர்கள் பட்டியலில் மீரா, சாக்க்ஷி பெயர் இணைக்கப்பட்டது. சென்ற வாரம் போலவே, சிறந்த போட்டியாளர்கள் கேப்டன் போட்டிக்கு, மோசமான போட்டியாளர்கள் சிறைக்கு எனக் கூறிவிட்டார் பிக் பாஸ். அப்படிதான் இவர்கள் சிறைக்கு சென்றார்கள்.

cl0381fg

இதுமட்டும் இல்லைங்க. இடையில், அங்க இன்னொரு சம்பவமும் நடந்தது. வெளியில் அமர்ந்து அபிராமி, சாக்க்ஷி பேசிக்கொண்டிருந்தபோது, 'பேசாதீங்க, தலை வலிக்குது' என்று கத்தியபடியே பாத்ரூமிற்குள் சென்று விட்டார். ஒரு மணி நேரத்திற்குமேல் வெளியே வரவில்லை. மைக் பேட்டரியை மாற்ற சொல்லி பிக் பாஸ் அழைத்தபோது வெளியே வந்த மீரா, 'இப்போ நான் பாத்ரூம்குள்ள போய்ட்டு கொஞ்ச நேரம் களிச்சு வெளிய வந்திருந்தேன். நான் ஜெய்ல்குள்ள் வந்ததுக்கு அப்புறம் ரொம்ப அமைதியா இருந்தேன். எல்லாரும் பேசிட்டு இருந்தோம். கத்திட்டு இருந்தோம். ஒரு ரெண்டு மூனுவாட்டி மறைமுகமா எனக்கு தலை வலிக்குது பேசாதீங்கனு சொன்னேன் (நீங்க நேரடியாகவே சொல்லிருக்கலாமே)' எங்கிற ஒரு விளக்கவுரையை அளித்தார். எதுக்கு!!

ஒவ்வொரு பிரச்னைக்கு பிறகும், 'வீடியோ போட்டு பார்த்தால் தெரியும், வீடியோ போட்டு பார்த்தால் தெரியும்'. ஆம் மீரா, வீடியோ போட்டு பார்த்தால் தெரிந்துவிடும். நான் என்ன நினைக்கிறேன் என்றால், பிக் பாஸ் இதை சற்று கருத்தில் கொள்ள வேண்டும். கொஞ்சம், அந்த வீடியோவ போட்டு காட்டிருங்க பிக் பாஸ்!

3d3g1g6

இன்றைய நாளின் லவ்லி மூமென்ட்:

சாக்க்ஷி சிறைக்குள் இருக்கையில், செரின் வந்து ஒரு கன்னத்தில் முத்தம் கொடுக்க, மறு கன்னத்தில் முத்தமிட்டார் அபிராமி. சிறைக்குள் இருவரின் முத்தங்களையும் ஏந்திக்கொண்டு வலம்வந்தார் சாக்க்ஷி.

-சு முரளிசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................