பிக் பாஸ் 24-வது நாள்: 'இது அதையும் தாண்டி புனிதமானது!'

வீட்டில் இருந்த 15 பேரில் இந்த பக்கம் ஏழு பேர், அந்த பக்கம் ஆறு பேர்-னு பிரிச்சு, நடுவரா மீராவை நியமிச்சு விவாதம் நடைபெற்றது.

பிக் பாஸ் 24-வது நாள்: 'இது அதையும் தாண்டி புனிதமானது!'

ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் எனத் துவங்கிய சுகமான காலை, வீட்டு மக்களிடையே நட்பு பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தது 24வது நாள். அப்போது பேசிய சேரன், லாஸ்லியா, அபிராமி, சரவணன் என அனைவரைப் பற்றி பேசியிருந்தாலும், 'கவின் அனைவர்மீதும் காட்டுகிற அன்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது' என புகழாரம் சூட்டினார்.

நேற்றைய 'கவின்-சாண்டி-மீரா' பிரச்னை இன்னும் விவாதத்திலேயேதான் இருந்தது. உரையாடலிற்குப்பின் மோகன் வைத்தியா, சாக்க்ஷி அதை பற்றி உரையாடிக்கொண்டிருந்தனர். நேற்றைய மற்றோரு பிரச்னை இன்றும் தொடர்ந்தது. அது சாக்க்ஷி, லாஸ்லியா, கவின் இடையேயான சாக்லேட் பிரச்னை.

g23qu54o

நேற்று, நடந்த பிரச்னையில் மிகவும் மன வருத்தத்துடன் இருந்த லாஸ்லியா, அந்த வருத்தத்தை சேரனுடன் பகிர்ந்துள்ளார். அந்த சாக்லேட் பிரச்னையின்போது வெளியே அமர்ந்து லாஸ்லியா கவினிடம் கதைத்துக்கொண்டிருந்தார். அப்போது சாக்க்ஷி வெளியே வருவதை கவனித்த கவின், எங்கு சாக்க்ஷி தவறாக புரிந்துகொள்வாளோ என எண்ணி, லாஸ்லியாவிடம் 'வெயில் அடிக்குது, மேக்-அப் எல்லாம் போட்ருக்க. கலைஞ்சுட போகுது. உள்ள போய் உட்காரு' என சொல்லியிருக்கிறார். இதுதான் லாஸ்லியாவை மன வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இந்த பிரச்னையும் விவாதிக்கப்பட்டது.

அந்த பிரச்னையில் உண்மையிலேயே லாஸ்லியா சற்று மனவருத்தம் அடைந்திருப்பார் போல. எப்போதும் காலையில் இசை இசைத்தவுடன் முதல் ஆளாக துள்ளிக்குதிக்கும் லாஸ், இன்று அமைதியாக சோஃபாவில் மேல் படுத்துக்கொண்டிருந்தார். இதெல்லாம் ஒரு பிரச்னையா, 'Get Well Soon' லாஸ்லியா. 

அடுத்து முந்தைய நாளில் விட்டுப்போன 'டிக்! டிக்! டிக்!' டாஸ்க்கின் 3வது மற்றும் 4வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. 3வது சுற்றில் 500 கடிகாரங்கள், 15 அலாரம், 30 செக்கண்ட்கள். அபிராமி, கவின் போட்டியாளர்களாக உள்ளே செல்கின்றனர். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அவர்களால் அலாரத்தை ஆப் செய்ய முடியவில்லை. 4வது சுற்றில் போட்டியாளர்களாக சென்ற தர்ஷனும், சாக்க்ஷியும் அந்த சுற்றில் தோல்வியடைந்துவிட்டனர். இம்முறை, 700 கடிகாரங்கள், 25 அலாரங்கள், 45 நொடிகள் கால அவகாசம். 

இந்த வாரத்தின் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் முடிவடைந்தது. இறுதியில், இந்த வார லக்சுரி பட்ஜெட்டிற்கான மதிப்பெண்கள் 1200 மட்டுமே. அடுத்து சாக்க்ஷி எதோ தவறு செய்தார் என அதில் 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுவிட்டன. ஆக மொத்தம், தற்போதைக்கு இந்த வார லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்கள் 1100 மட்டுமே.

50s4pc5

இடையில், கவின்-சாண்டி தங்கள் கம்போசிங்கில் ஒரு பாடலை இணைத்துள்ளனர். இந்தமுறை பாட்டு மோகன் வைத்தியா அவருக்காக!

ஒரு விவாதத்தை நடத்த வேண்டும் என பிக் பாஸ் டாஸ்க் அளிக்கிறார். வீட்டில் இருந்த 15 பேரில் இந்த பக்கம் ஏழு பேர், அந்த பக்கம் ஆறு பேர்-னு பிரிச்சு, நடுவரா மீராவை நியமிச்சு அந்த விவாதம் துவங்கியது.

கிளீனிங் டீம் பற்றிய முதல் விவாதத்தின் ஹைலைட் என்னவென்றால், வீட்டில் பலர் பல் தேய்காத நிலையில், செரின் ராவனனின் பற்களை கூட தேய்த்தாராம்!

அடுத்து இந்த வீட்டில் உள்ளவர்களின் உறவு நட்பு, இல்லை அதையும் தாண்டி புனிதமானது.

'இது அதையும் தாண்டி புனிதமானது! புனிதமானது! புனிதமானது!' என்பது அனைவருக்கும் தெரிந்தே. இதுக்கெல்லாம் எதுக்குப்பா விவாதம். ஆனால் விவாதத்தில் வெற்றி பெற்றது நட்பு மட்டும்தானாம், மீரா அறிவித்துவிட்டார்.

5515jkc8

இந்த விவாதத்தில் வீட்டு மக்கள் தர்ஷன், கவின் மண்டையை உருட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்பது கவனிக்க வேண்டியது.

இதுவரை காமெடியாக சென்றுகொண்டிருந்த விவாதம், 'வீட்டு மக்கள் வாய் பேச்சில் வல்லவர்களா? மவுன குருக்களா?' என்ற தலைப்பின்மூலம் சீரியஸ் நிலையை அடைந்தது. இறுதியில் வாய் பேச்சில் வல்லவர்கள்தான் தேவை என பேசிய அணி வெற்றி பெற்றுவிட்டது. எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்க்க வேண்டும் என்ற சேரனின் பேச்சே வெற்றியை தேடித்தந்தது.

சேரன் கூறியதை அனைவரும் தீவிரமாக எடுத்துக்கொண்டார்களோ என்னமோ, முதலில் மதுமிதா-மீரா (விவாதத்தின் இடையில் மீராவை பற்றி மது பேசிய பிரச்னை), அடுத்து அபிராமி-முகென் (இது ஒரு நட்பு பிரச்னை), லாஸ்லியா-கவின், சாக்க்ஷி-கவின் (இவங்க பிரச்னைதான் உனக்கு தெரியுமே, அந்த சாக்லேட் பிரச்னை) அவர்கள் பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள் போல.

இன்றைய பிக் பாஸில் சாக்க்ஷி - மீராவை ஒன்றாக சிறைக்குள் அடைத்து அழகு பார்க்கிறார் பிக்பாஸ். முன்பு அவர்கள் இடையில் நடந்த பிரச்னை மீண்டும் இன்று தொடர்கிறது. கடைசியில் சிறைக்குள் கலவரம். இவை அனைத்தையும் தாண்டி இன்றைய நாள், லாஸ்லியா நாளாகத்தான் இருக்கப்போகிறது போல. காத்திருந்து பார்ப்போம்.

-சு முரளி

More News
Listen to the latest songs, only on JioSaavn.com