This Article is From Jul 17, 2019

பிக் பாஸ் 23வது நாள்: 'இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!'

'இதன்மூலம், மீரா, ஒரு சின்ன பிரச்னையை பெரிதாக்கி, அனைவரின் கோபத்தையும் தன்மீது திருப்பி, மக்கள் மனதில் அனுதாபத்தை ஏற்படுத்த நினைக்கிறாரோ!' என பலரின் கருத்தாக வெளிப்படுகிறது. 

பிக் பாஸ் 23வது நாள்:  'இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!'

செவ்வாய் மீன் மார்க்கெட்டுடன் பிக் பாஸ் நாள் துவங்கியது. அபிராமி இந்த வீட்டை 'மீன் மார்க்கெட்' என்று கூறியதனால் என்னவோ, அவரையே மீன் விற்க வைத்துவிட்டார் பிக் பாஸ். மீன் விற்பது மட்டுமில்லாமல், எப்படி மீன் விற்பது என வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார் அபிராமி. சாண்டி, மதுமிதா, செரின், மீரா என ஒரு பட்டாளமே மீன் விற்க அந்த டாஸ்க் இனிதே முடிந்தது.

பாத்ரூமிற்குள், ஒரு ஈ-யைப் பார்த்த செரின், மோகன் வைத்தியாவை அழைத்து, 'எவ்வளவு பெரிய ஈ பாருங்க!' என காட்ட, அது 'நான் ஈ' என ஒரு கவுன்டர் கொடுக்கிறார் மோகன் வைத்தியா.

bvbtmg08

அடுத்து 'எனக்கு பாத்ரூம் கிளீனிங் டீம்-ல வேலை செய்ய முடியல, குக்கிங் டீம்-ல மாத்திடுங்க' என கேப்டன் சாக்ஷியிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அடுத்து, குக்கிங் டீமில் இருந்தால் பிரச்னை வரும் என சாக்க்ஷி கூற அப்போ 'வெசல் வாஷிங்' டீமில் வேலை செய்கிறேன் என்றார். அடுத்து ஹால் ஏரியாவில் ரேஷ்மா இது குறித்து விவாதிக்க, நான் பாத்ரூம் டீமிலேயே வேலை செய்கிறேன் என கூறிவிட்டார். இதன் பிறகு ஒரு பெரிய விவாதமே ஏற்பட்டது. இப்போது அவர் எந்த டீம்ல இருக்காருன்னு சத்தியமா தெரியலப்பா!

பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவருக்கும் சாக்லேட் கொடுத்திருந்தார். அந்த சாக்லெட் இவ்வளவு பெரிய சம்பவத்தை ஏற்படுத்தும் என பிக் பாஸே எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். அந்த வீட்டின் சுட்டிக் குழந்தை லாஸ்லியா வழக்கம்போல, பல சாக்லெட்களை கைகளில் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் வலம் வந்துகொண்டிருந்தார். 'எல்லோருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு சாக்லேட் கொடுக்க உன்னிடம் மட்டும் எப்படி இவ்வளவு சாக்லெட்?' என சாண்டி வினவினார். முதலில், சொல்லாமல் சிரித்துக்கொண்டிருந்த லாஸ்… தர்ஷன், கவின் கொடுத்த சாக்லெட்தான் இது எனக் கூறினார். அது சாண்டி, செரின் ஆகியோர் காதுகள் மட்டுமின்றி, சாக்க்ஷியின் காதுகளிலும் விழுந்துவிட்டது. அங்குதான் வெடித்தது பிரச்னை. ஏனென்றால் சாக்க்ஷி தனக்கு கொடுத்த சாக்லெட்டை கவினிற்கு கொடுத்திருந்தார். இந்த சம்பவத்திற்குப்பின் சாக்க்ஷி - கவினிடையே சண்டை வெடித்துவிட்டது. 

பிக் பாஸ் மைன்ட் வாய்ஸ்: 'இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!'

mfbskc58

சண்டை பெரிதாக, 'சாக்க்ஷியிடம் என்ன நடந்தது என பேசு' என்று சொல்லிவிட்டு கவின் தனக்கு கொடுத்த சாக்லேட்டை திரும்ப கொடுத்துவிட்டார் லாஸ்லியா. பின் வீட்டிற்குள் சென்று, சேரனின் அருகில் அமர்ந்த லாஸ், திடீரென அழுதுவிட்டார்.

'என்னது லாஸ்லியா கண்ணுல கண்ணீரா!' என உங்கள் இதையத்தில் இடி இடிக்கும் சத்தம் இங்கு வரை கேக்குது பாய்ஸ். கவலை படாதீங்க 'சேரன் அப்பா' சமாதானப்படுத்திட்டார். 

ndt8sgvo

அந்தப் பிரச்னை அங்கு ஓய, 'தப்பாச்சே!' என பிக் பாஸ் 'டிக்! டிக்! டிக்!' என ஒரு டாஸ்க்கை அறிவிக்கிறார். யார் இந்த டாஸ்க்கில் பங்கு பெறப்போகிறீர்கள் எனக் கேட்க, மீரா தானாக முன்வருகிறார். அவருடன் இன்னொரு போட்டியாளராக சாண்டியையும் உதவிக்கு சேரனையும் உள்ளே அனுப்பி வைக்கிறார்கள் வீட்டு மக்கள். இது 700 மதிப்பெண் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் என அறிவிக்கிறார் பிக் பாஸ். டாஸ்க் என்னவென்றால் ஆக்டிவிட்டி ஏரியாவிற்குள் 300 கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் இரண்டு கடிகாரங்களில் அலாரம் ஆன் செய்யப்பட்டிருக்கும். 10 நொடிகளில் அவற்றை கண்டுபிடித்து ஆப் செய்துவிட்டால் 700 மதிப்பெண்கள், அதன்பின் தாமதாமாகும் ஒவ்வொரு 10 நொடிகளுக்கு 100 மதிப்பெண்கள் குறையும். 18 நொடிகள் இரண்டு கடிகாரங்களையும் சாண்டி ஆப் செய்துவிடுகிறார். 600 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவிட்டன.

'டிக்! டிக்! டிக்!' டாஸ்க் இரண்டாவது சுற்றிற்கான அறிவிப்பு வருகிறது. இந்த முறை 400 கடிகாரங்கள், 4 அலாரம், 20 நொடிகள், போட்டியாளாராக ரேஷ்மா, முகென், துணையாக சரவணன், உள்ளே செல்கிறார்கள். 28 நொடிகளில் கண்டுபிடித்து ஆப் செய்துவிட்டார்கள். இதன் விளைவு பிக் பாஸ் விட்டிற்கு 600 லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்கள்.

இடையில், 'இரண்டாவது கடிகாரத்தை நான் கரெக்டா கண்டுபிடிச்சேன்ல' என சாக்ஷி ஆரம்பிக்கிறார். 'என்னது ரெண்டாவதா!' என சாண்டி கேட்க, 'சாண்டிதான் ரெண்டையுமே கண்டுபிடிச்சான்' என சரவணன் கூறினார். அங்கிருந்த கவின், 'அண்ணன் மட்டும் தனியா போயிருந்தா 10 செக்கண்ட்லையே முடிஞ்சிருக்கும்' என கூறியிருந்தார். இதை 'நான் போனதே வேஸ்ட்'-னு கவின் சொன்னதாக அனைவரின் காதுகளிலும் மீரா கூற, கடைசியில் மீரா இப்படி சொன்னது கவின் காதிலேயே விழுந்துவிட்டது. பின் மீராவிடம் பேசிய கவின், 'நான் காமெடிக்கு சொன்னேன், ஹர்ட் ஆகியிருந்த மன்னிச்சிரு' என மன்னிப்பு கேட்க, அப்போது மீரா சமதானம் ஆனார்.

i696uks

ஆனால் அந்த பிரச்னை அங்கு முடியவில்லை. இந்த பிரச்னை சாக்க்ஷியின் காதுகளுக்கு செல்ல, ‘எல்லா புகழையும் சாண்டியே எடுத்துக்கிட்டான்' என புகார் செய்கிறார். பின் சாண்டியை அழைத்து சாக்ஷி பேச, மீராவின் விருப்பத்திற்கு ஏற்ப 'ரெண்டு பேரும்தான் சேந்து விளையாடுனோம், இரண்டாவது அலாரத்தை மீராதான் கண்டுபிடித்தார்' என அனைவரின் முன்பும் சாண்டி விவரிக்கிறார். அதன்பின்னும் மீரா ஓய்வதாக இல்லை. இந்த பிரச்னையை சாக்ஷிதான் ஆரம்பித்தார் என சாண்டி, கவினிடம் கூறுகிறார். 

அதன்பின் இன்னும் பிரச்னை பெரிதாகிறது. சாண்டி, சாக்க்ஷி, ரேஷ்மா, கவின், செரின் என அனைவரின் முன்பும் இந்த பிரச்னை வருகிறது. முன்பு ஒன்றும், இப்போது ஒன்றுமாக மீரா பேச, இது இவர்கள் அனைவரின் கோபம் மீராவின் மீது திரும்புகிறது. அனைவரும் மீராவை திட்ட ஆரம்பிக்கிறார்கள்.

'இதன்மூலம், மீரா, ஒரு சின்ன பிரச்னையை பெரிதாக்கி, அனைவரின் கோபத்தையும் தன்மீது திருப்பி, மக்கள் மனதில் அனுதாபத்தை ஏற்படுத்த நினைக்கிறாரோ!' என பலரின் கருத்தாக வெளிப்படுகிறது. 

'அப்படியா மீரா?'

'மீரா கவணம் ஈர்க்க நினைக்கிறா?' பிக் பாஸின் வரும் நாட்களில் தெரிந்துகொள்வோம். 

rpngug4g

நேற்ற நாளில் 'ஜாலி' மொமென்ட்!

முதலில் காலையில் நடந்த மீன் மார்க்கெட் ஷோ.

ஆடுத்து கவின்-சாண்டி கான்வோ.

கவின், லாஸ்லியாவிற்கு கொடுத்த சாக்லேட்டை திரும்ப கொடுத்த வருத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்.

சாண்டி: சாக்லேட் கொடுத்துடாலா இப்போ உன்கிட்ட

கவின்: ம்ம்ம்

சாண்டி: சரி கொடு, நம்ம ஷேர் பண்ணிக்கலாம். (கவின் ஒரு லுக் விட, கொஞ்ச நேர அமைதிக்குப்பிறகு) இல்ல சாக்லேட்ட குடுத்துட்டாங்களே, சாப்பிடுவோமே, அதுக்காக...

கவின்: ரெண்டு பேரையுமே சமாதனப்படுத்த முடியலான அப்புறம் ஷேர் பண்ணிக்கலாம்!

இந்த ரணகளத்துலையும், உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பாடா! (அவர்களை குழந்தை மாதிரி பண்றாங்கனு சொல்லிட்டு நீங்க குழந்தை மாதிரி பண்றீங்களேடா!)

-சு முரளி