This Article is From Jul 16, 2019

பிக் பாஸ் 22வது நாள்: 'ரொம்ம்ம்ம்ப நல்லா பண்றீங்க பிக் பாஸ்!'

வீடு நல்ல இருந்தா பொறுக்காதே… உடனே ஒரு டாஸ்க்க போட்ருவீங்களே பிக் பாஸ். இப்போ என்ன டாஸ்க்னா 'சொல்வதெல்லம் உண்மை'.

பிக் பாஸ் 22வது நாள்: 'ரொம்ம்ம்ம்ப நல்லா பண்றீங்க பிக் பாஸ்!'

'ஒரசாத உசுரத்தான் உருக்காத' என்ற பாடலுடன் பிக் பாஸின் 22 நாள் துவங்கியது. பாடலுடன் மட்டுமல்ல, ஒரு சம்பவத்துடனும் துவங்கியது. அது ஒரு காபி பிரச்னைப்பா. மோகன் வைத்தியா - சரவணன் இடையேயான பிரச்னை. கிட்சன்ல எல்லாரும் காபி கேட்டுட்டு இருந்தாங்க. அப்போ மோகன் வைத்தியா ஓவன் கிட்ட நின்னு காபி வச்சிக்கிட்டு இருந்தாரு. அதை நம்ம சரவணன் அண்ணன் கலாய்ச்சிருப்பார் போல. வெளிய வந்து ரெஷ்மா, சாக்ஷியிடம் விவரித்துக் கொண்டிருந்தார். என்ன நினைச்சார்-னு தெரியல, திடீர்னு கண் கலங்க ஆரம்பிச்சிருச்சு. பிறகு, 'நான் விளையாட்டுக்கு அப்படி செய்தேன், தப்பா இருந்த மன்னிச்சுக்கோங்க'-னு சரவணனும் மன்னிப்பு கேட்டுட்டார்.

fohtqs78

அந்தப் பிரச்னை அப்படியே முடிய, அடுத்து நான்காவது வாரத்திற்கான நாமினேஷன். இந்த நிகழ்ச்சியோட எடிட்டர்ஸ் செம்ம கட் வச்சிருப்பாங்க. நாமினேஷன் துவங்குனதுமே, அனைவரும் சொன்ன பெயர் 'மீரா, மீரா, மீரா'. அம்மாடியம்மோ, மீரா வாங்குன வாக்குகள் எவ்வளவு தெரியுமா 11/15. அடுத்த அனைவரின் ஒருமித்த குரல் சரவணன். இவருக்கு விழுந்த வாக்குகள் எண்ணிக்கை 7. சேரன்- 3 வாக்குகள், மோகன் வைத்தியா -2 வாக்குகள், அபிராமி- 2 வாக்குகள் என நான்காம் வார நாமினேஷனில் சேர்ந்துக்கிட்டாங்க. 

3 வாரம் ஆச்சு. சென்ற வாரம் மதுமிதாவின் ஓட்டுகளையும் சேர்த்து, மீரா வாங்கியிருக்காங்க. '11 பேர் உங்க பேர சொல்றாங்க. அவ்வளவு பிரச்னையா பண்றீங்க மீரா!'. அவர் பேரை சொன்ன எல்லாரும், சொன்ன ஒரே காரணம், 'அங்க ஒண்ணும்ம் இங்க ஒண்ணுமா மீரா பேசுறாங்க' என்பதுதான். 

n1me50to

அடுத்து சரவணன்… போன வாரம் வரை பாசத்தை காட்டிய குடும்பம், இந்த வாரம் வேலை செய்யவில்லை என கம்ப்லைன்ட் செய்கிறது. ஒரே நாளில் இரண்டாவது முறையாக அவருடைய ஜாலி பேச்சு, மதுமிதாவின் ஆக்ஷனால் பெரிய ரியேக்ஷனாக மாறிடுச்சு. அடுத்து இந்தப் பிரச்னை பேசி தீர்க்கப்பட்டது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். 'நானே கொழம்பு வக்கிறேன்னு சொன்னது எல்லாம் ஒரு பிரச்னையாமா?'

அடுத்து சொற்ப வாக்குகளில் சேரன், மோகன் வைத்தியா, அபிராமி இந்த நாமினேஷனில் இணைந்துவிட்டார்கள். 

இதுக்கெல்லாமா அழுவீங்க அபிராமி. சரி விடுங்க பாஸ், அரசியல்ல இதெல்லாம் சாதரனமப்பா!

வழக்கம்போல சாண்டி-கவின் மியூசிக் கம்போசிங் அகாடமியிலிருந்து சில பாடல்கள் இருந்தது. இந்த முறை இவர்களிடம் சிக்கியது மீரா, ரேஷ்மா!

gb7iccvo

வீடு நல்ல இருந்தா பொறுக்காதே… உடனே ஒரு டாஸ்க்க போட்ருவீங்களே பிக் பாஸ். இப்போ என்ன டாஸ்க்னா 'சொல்வதெல்லம் உண்மை'. இந்த் டாஸ்க் கொஞ்சம் குதுகலமாதான் போச்சு, ஏன்னா கேட்கப்பட்ட கேள்வி எல்லாம் அப்படி!

நாமினேஷன்ல எப்படி மீராவின் பெயரே ஒலித்ததோ, இங்கும் அதே!

'இந்த வீட்டை விட்டு சென்றால் இவரை மறந்துவிடுவேன்' என சேரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு 'இந்த வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டால் உன்னை மறந்துவிடுவேன்' என்பது சேரனின் பதில்.

'நீங்கள் பாத்து பொறாமைப்படும் அளவிற்கு இவர்களிடம் ஒன்றுமில்லை' என மோகன் வைத்தியாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதுதான், 'நான் பொறமைப்படும் அளவிற்கு மீராவிடம் ஒன்றுமில்லை'.

நீங்கள் இவர்களை பார்த்ததே உங்கள் வாழ்வின் சாபம் என்பது அபிராமிக்கான கேள்வி. 'மீரா, உன்னைப் பார்த்ததே என் வாழ்வின் சாபம்' என்பது அவரின் பதில்.

இவ்வாறு அனைவரிடமிருந்தும் மீராவின் பெயர் சொல்லப்பட்டுவிட்டது.

நீங்கள் பார்த்து பொறாமைப்படும் நபர்?

நான் பார்த்து பொறாமைப்படும் ஒரு நபர் சாண்டி - மோகன் வைத்தியா 

vnri492o

உங்களுக்கு யாருடன் பேசப் பிடிக்கும்?

கவினுடன் பேசப் பிடிக்கும் - லாஸ்லியா (கரெக்ட் தான், இன்று முழுவதும் லாஸ்லியா கவினுடன் தான் கதச்சுட்டு இருந்தாங்க)
(பல பேர் கனவுல மண் அள்ளி போட்டுட்டீங்களே பிக் பாஸ்)

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்?

என் வாழ்வில் நான் லாஸ்லியாவை மறக்க மாட்டேன் - சேரன் (‘தந்தை எப்படி மகளை மறக்க முடியும்' என்கிறார் சேரன்)

இந்த வீட்டில் மிகவும் உண்மையானவர்?

சரவணன் உண்மையானவர் - கவின் (அப்போ, மத்தவங்க எல்லாம் என்ன தக்காளித் தொக்கா?)

உங்களுக்கு இவர் நண்பனாக கிடைத்தது பெரும் பாக்கியம்?

முகேன் எனக்கு நண்பனானது எனது பாக்கியம் - அபிராமி

யாருடன் பேசும் போது உங்களுக்கு நேரம் போவதே தெரியாது?

அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது - முகேன் 

('டேய்! என்னடா, நடக்குது இங்க!' உங்க மைன்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன் மக்களே)

இந்த வீட்டில் மிகவும் கண்ணியமானவர் யார்?

சேரன் கண்ணியமானவர் - ரேஷ்மா

இதெல்லாம், பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு, இவர்கள் அளித்த பதில்கள். 

நீங்கள் கேட்ட கேள்விகளையெல்லாம் பார்த்தால் 'ரொம்ம்ம்ம்ப நல்ல பண்றீங்க பிக் பாஸ்!' என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, "தர்ஷன்தான் என் தகுதிக்கு ஏற்ற போட்டியாளர்" என்றார் மீரா. 

மீரா சொன்ன மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். கன்சல்டிங்  ரூமிற்குள் 'தர்ஷன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், அதனால் அவரை நாமினேட் செய்தேன்' எனக் கூறியிருந்தார். 

‘நான் ஒரு கடுமையான போட்டியாளர் அப்பிடிங்கிறதுனாலதான், எல்லாரும் என்னை நாமினேட் செய்கிறார்கள்' எனக் கூறியிருந்தார். அதனால்தான், மீரா தர்ஷனை நமினேட் செய்திருப்பாரோ?

திரியை கொளுத்திப் போட்டாச்சு, அது லைட்டா புகையவும் ஆரம்பிச்சிருச்சு, 'அணுகுண்டு வெடிக்குமா இல்ல புஸ்வானமா பொகையுமா?' என்பது அடுத்த நிகழ்ச்சியில்தான் தெரியும்!

-சு முரளி

.