'கம் பேக் சரவணன்'- டிவிட்டரில் கலங்கும் நெட்டிசன்கள்!

#ComebackSaravanan என்ற ஹேஸ்டேக்கின் மூலம் சரவணனிற்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'கம் பேக் சரவணன்'- டிவிட்டரில் கலங்கும் நெட்டிசன்கள்!

Bigg Boss Tamil 3: கடந்த திங்கட்கிழமையன்று பிக் பாஸ்(Bigg Boss) வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார். சென்ற வாரம் கமலுடனான விவாதத்தின்போது, பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணித்திருக்கிறேன் என்ற ஒரு சர்ச்சைக்குறிய கருத்தை கூறியிருந்தார். பின், அவர் தவறான பார்வையில் அதை கூறவில்லை, தன்னைப்போல் யாரும் செய்யக்கூடாது எனவே கூறினேன் என மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த சம்பவம் நடைபெற்ற ஓரு வாரத்திற்குப்பின் சரவணன்(Saravanan) பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மக்களிடையே எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து ஒருபுறம் மக்களிடையே எதிர்ப்பு எழுந்திருந்தாலும், மறுபுறம் சரவணனிற்கு ஆதாரவாகவும், அவரை வெளியே அனுப்பியதை எதிர்த்தும் மக்கள் பலர் தங்கள் கருத்துகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். மக்கள் டிவிட்டரில் #ComebackSaravanan என்ற ஹேஸ்டேக்கின் மூலம் சரவணனிற்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சரவணனிற்கு ஆதரவான நெட்டிசன்களின் சில பதிவுகள் இதோ!
 

சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு பிறகு வீட்டில் அனைவரின் மனநிலை எம்மாதிரி இருந்தது என்பது குறித்து வீடியோ மீம்களையும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
 

இந்த பிரச்னை குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் தெரிவியுங்கள்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................