
Saravanan, Bigg Boss 3 Contestant: பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றம்
ஹைலைட்ஸ்
- பெண்களை பேருந்தில் உரசுவேன் என சரவணன் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது
- பாடகி சின்மயி இது குறித்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்
- பின், சரவணன் அந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் வேண்டியிருந்தார்
Bigg Boss 3 Tamil: நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் (Saravanan) வெளியேற்றப்பட்டுள்ளார். என்னடா இது, அவர் நாமினேஷனிலேயே இல்லை, அதுவும் இல்லாமல் இந்த வார எளிமினேஷனாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். பிறகு என்ன காரணத்திற்காக சரவணன் வெளியேற்றப்பட்டார்?
முன்னதாகவே, இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்திருந்தது. அதுதான், 'தன் இளம் வயதில் பெருந்தில் செல்லும்போது பெண்களை உரசுவேன்' என கமலுடன் (Kamal Hassan) நடந்த விவாதத்தின்போது சரவணன் குறிப்பிட்டிருந்தார். அப்போது, வெளியில் சமூக வலைதளங்களில் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இன்னிலையில், அந்த விவாதம் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில், அந்த பிரச்னை காரணமாக அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து (Bigg Boss House) வெளியேற்றப்பட்டார். இந்த தகவலை பொழுதுபோக்கு மற்றும் சினிமா செய்திகளை பின்பற்றும் இரண்டு பிரபலங்கள், ரமேஷ் பாலா, கைஷிக் ஆகியோர் தங்களது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தனர்.
#BREAKING : #Saravanan eliminated from #BiggBossTamil3 for saying he has inappropriately behaved with women in Bus travel during his youth..
— Ramesh Bala (@rameshlaus) August 5, 2019
Breaking : #Saravanan evicted from #BiggBossTamil3 due to his recent controversial comments abt playfully groping female passengers while traveling in bus during his college days..
— Kaushik LM (@LMKMovieManiac) August 5, 2019
HUGE decision by #BiggBossTamil@vijaytelevision
கடந்த வாரம், கமல்ஹாசனின் சந்திப்பின்போது, அந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கின் இடையே, சேரன் - மீரா இடையே நடைபெற்ற பிரச்னை குறித்து கமல் விவாதித்துக்கொண்டிருந்தார். அப்போது, மீராவிடம், "இவ்வாறு தெரியாமல் கை படுவது எல்லாம் குற்றம் என்றால், நீங்கள் அரசுப்பேருந்துகளில் பயணிக்கவே முடியாது" என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது சரவணன், தன் இளம் வயதில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்துகளில் பயணித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அவர் அப்படி குறிப்பிட்டது, மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. சமூக வலைதளங்களில் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இது குறித்து பாடகி சின்மயி கூட தன் டிவிட்டர் கணக்கில், இவ்வாறு ஒரு வெளிப்படையாக கூறுவதும், அதை ஒரு நகைச்சுவையான விஷயம்போல ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்புவதும் ஒரு வேதனைக்குறிய செயல் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
A Tamil channel aired a man proudly proclaiming he used the Public Bus Transport system to molest/grope women - to cheers from the audience.
— Chinmayi Sripaada (@Chinmayi) July 27, 2019
And this is a joke. To the audience. To the women clapping. To the molester.
Damn. https://t.co/kaL7PMDw4u
சமூக வலைதளங்களில் வெளியான எதிர்ப்பை தொடர்ந்து, அடுத்த நாள் பிக் பாஸ் சரவணனை அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டினார். சரவணனும், தான் அப்படி செய்தேன், இனி யாரும் அப்படி செய்யக்கூடாது என்பதற்காகவே அதை கூறினேன் எனக் குறிப்பிட்டு மன்னிப்பும் கேட்டார். அப்படி இருந்தும் அந்த பிரச்னை ஓயாத நிலையில், நேற்று சரவணனை அழைந்த பிக் பாஸ், எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினார்.