Bigg Boss வீட்டில் லாலா, "டேய் முகேனு, அபிராமி திட்டும் டா!" கேலி செய்யும் செரின் அம்மா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களிலும், இந்த 'ஃப்ரீஷ் டாஸ்க்' இடம்பெற்றிருந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Bigg Boss வீட்டில் லாலா,

Bigg Boss 3 Tamil, Sandy: டாஸ்கின் ஒரு பகுதியாக வீட்டிற்குள் வந்த சாண்டியின் குழந்தை லாலா


Bigg boss 3: பிக் பாஸ் போட்டியாளர்கள் சற்று மகிழ்ச்சியாகவே இந்த வாரத்தில் பயணிக்கிறார்கள், காரணம் 'ஃப்ரீஷ் டாஸ்க்'. பிக் பாஸ் (Bigg boss) நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களிலும், இந்த 'ஃப்ரீஷ் டாஸ்க்' இடம்பெற்றிருந்தது. இந்த டாஸ்கின்போது, பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே அனுப்பப்படுவார்கள். அப்படி இந்த சீசனிலும், 12வது வார லக்சரி பட்ஜெட்டிற்காக இந்த 'ஃப்ரீஷ் டாஸ்க்' அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கின் முதல் நாளில் முகெனின் (Mugen) அம்மா மற்றும் தங்கை வீட்டிற்குள் வந்தார்கள், இரண்டாவது நாளில் லாஸ்லியாவின் (Losliya) குடும்பத்தினர், மூன்றாவது நாளில் தர்சன் (Tharshan), வனிதா (Vanitha) மற்றும் சேரனின் (Cheran) குடும்பத்தினர் என அனைவரும் உள்ளே அனுப்பபட்டனர். இன்னும் மீதமுள்ளது கவின், சாண்டி, செரின். இவர்களில் கவினின் நண்பர் மற்றும், சாண்டியின் (Sandy) மனைவி மற்றும் குழந்தை வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய ப்ரோமோ உறுதி செய்துவிட்டது.

நேற்றைய நாளின் முதல் பகுதியில், தர்சனின் அம்மா மற்றும் தங்கை உள்ளே அனுப்பப்பட்டனர். உள்ளே வந்த அவர், அனைவருக்கும் வாழ்த்து சொன்ன நேரத்தில் அவருக்கு ஒருவர் வாழ்த்து சொன்னார். தர்சனின் அம்மாவுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய சாண்டி, தொடர்ந்து பிக் பாஸிடம் 'குருநாதா கேக் அனுப்புங்க' என்று வேண்டியதை தொடர்ந்து, கேக் அனுப்பப்பட்டது, பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. அடுத்து வனிதாவின் மகள்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். உள்ளே இருந்த அனைவருடனும் செம்ம ஜாலியாக விளையாடிவிட்டு 'அம்மா உங்க கையால் சமச்சு ஊட்டி விடுங்க' என்று கேட்க, தான் சமைத்த சாப்பாட்டை ஊட்டி விட்டார் வனிதா. அடுத்து சேரனின் அம்மா, மகள் என்று அவரது குடும்பத்தினரும் வீட்டிற்குள் வந்தனர். 

இன்னிலையில், இந்த டாஸ்க்கில் அனைவரையும் தாண்டி ஒருவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். இந்த டாஸ்க் துவங்கியதிலிருந்து, துவக்கத்தில் அனைவருக்கும் ஃப்ரீஷ் சொல்லிவிட்டு, சாண்டிக்கு மட்டும் ரிலீஸ் சொல்லும்போது, 'லாலா வரப்போறா, ரெடியா இரு' என்று கவின் சொன்னபோது, அப்போதிருந்து இப்போது வரை, சாண்டி ஒவ்வொரு முறை, ஃப்ரீஷ் சொல்லும்போதும், மிகவும் ஆவலாக அந்த கதவுகளை பார்த்துக் கொண்டிருந்தார், பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த ஏக்கத்தை இன்று பிக் பாஸ் தீர்த்துவிட்டார். அதுமட்டுமின்றி, கவினின் நண்பரான பிரதீப்பும் இன்று வீட்டிற்குள் சென்று, இவ்வளவு கேவளமா நீ ஆடுன கேம்க்கு, நீ வந்து மட்டமா ஒரு விஷயம் பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்கள கைவிட்டதுக்கு, இங்க இருக்க எல்லாரையும் காயப்படுத்துனதுக்கு, நான் இப்போ செய்யலாம்னு இருக்கேன். டைட்டில் ஜெய்ச்சிட்டு, நீ பெரிய ஆள் ஆகிட்டன, என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு என்ன திருப்பி அடுச்சுக்கோ' என்று கூறி கவினின் கன்னத்தில் பலார் என ஒரு அரை கொடுத்தார்.

இதற்கிடையில், செரின் வீட்டிலிருந்தும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார்கள். உள்ளே வந்த செரினின் அம்மா செய்த அலப்பறைகள் பல. முதலில் லாஸ்லியாவிடம் ' ஒன்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் நல்லதாவே நடக்கும்' என்றார். அடுத்து தர்சனை பார்த்து 'ஹாய், ஹேண்ட்சம்', சாண்டியிடம் 'நீ வந்து செரினுக்கு ரொம்ப டார்சல் கொடுக்குற' என்று எச்சரித்துக் கொண்டிருக்க, முகேன் அவரது சகோதரியை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது "டேய் முகேனு வேண்டாம் டா, அபிராமி திட்டும் டா!" என்று கலாய்த்தார். செரின் நீங்க சொன்ன மாதிரி, உங்க அம்மா வேற லெவல்தான்.

இது தொடர்பாக: Big Boss: வீட்டிற்குள் கவின் கன்னத்தில் அரை, யார் அந்த நபர்?

இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் ஆனந்தம் நிறைந்ததாக பயணிக்கிறது.

இந்த நாளின் லவ்லி மூமென்ட்:

முன்னதாக கவின்-சாண்டி இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தது. சாண்டி விளையாட்டாக செய்த சில செயல்களுக்காக, கவின் சற்று கடுமையாகவே அவரிடம் பேசியிருந்தார். பிக் பாஸ் (Bigg boss) அவருடைய மகள் லாலாவை அடுத்து, சாண்டி ஒருவருக்காக அழுதார் என்றால் அது கவினாகத்தான் இருக்கும். நேற்றும் சாண்டி கவலையுடந்தான் இருந்தார். லாஸ்லியாவின் குடும்பத்தினர் வெளியே செல்லும்போது, கவின் சற்று சோகத்துடன் காணப்பட்டார். அப்போது சாண்டி கவினிடம் கூறிய வார்த்தைகள் தான் இவை ''நாளைக்கு பாட்டு பாடுறோம், ஜாலி பண்றோம்!''சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................