This Article is From Aug 22, 2019

'உங்கள் ஊகங்களில் ஒருவர்மீது அவதூறு பரப்பாதீர்கள்' -மதுமிதாவிற்கு ஆதரவாக ரேஷ்மா!

பிக் பாஸ் போட்டியாளரான ரேஷ்மா, நேற்று இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மதுமிதாவின் புகைப்படத்தை பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'உங்கள் ஊகங்களில் ஒருவர்மீது அவதூறு பரப்பாதீர்கள்' -மதுமிதாவிற்கு ஆதரவாக ரேஷ்மா!

மதுமிதாவிற்கு ஆதரவாக ரேஷ்மா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களில் பெறும் விவாதமாக நிற்பது 'மதுமிதா மீது தொலைக்காட்சி புகார் அளித்துள்ளது' என்பதுதான். முன்னதாக நேற்று மதுமிதா மீது பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் தொடர்பு கொண்டபோது, அந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இன்னிலையில், இந்த பிரச்னையில் மதுமிதாவிற்கு ஆதரவாக தன் குறலை பதிவு செய்துள்ளார் ரேஷ்மா. 'உங்கள் ஊகங்களில் ஒருவர்மீது அவதூறு பரப்பாதீர்கள்'  என்று அவர் கூறியுள்ளர். பிக் பாஸ் போட்டியாளரான ரேஷ்மா கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக எளிமினேஷனில் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரேஷ்மா, "அவரின் தனியுரிமைக்கு மதிப்புக்கொடுங்கள்" எனக் கூறியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளரான ரேஷ்மா, நேற்று இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மதுமிதாவின் புகைப்படத்தை பதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், "அவரின் தனியுரிமைக்கு மதிப்பளித்து அவரை அமைதியில் இருக்க விடுங்கள் என நான் அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.அவர் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளார். அவர் அற்புதமான, திறமைகள் நிரைந்த, அன்பான ஒரு நபர். என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவரை தாக்குவது, நிஜ வாழ்க்கையில் ஒருவர் மீது குறிவைத்து பேசுவது போன்ற செயல்களை செய்யாதீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தில், ஊகங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை மதிப்பிடு செய்யாதீர்கள், உங்கள் ஊகங்களில் ஒருவர்மீது அவதூறு பரப்பாதீர்கள்."

முன்னதாக சம்பளம் தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதாக தொலைக்காட்சி தரப்பிளிருந்து மதுமிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட போது, "பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்." என்று அந்த தகவலை மறுத்தார். மேலும் வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, "இந்த மாதிரி எதாவது வழக்கு பதிவாகியிருந்தால் அது தொடர்பாக எனக்கு அழைப்பு வந்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு எந்த அழைப்பும் வரவில்லை" என மதுமிதா விளக்கம் அளித்திருந்தார்.

.