அதே கஸ்தூரி, இதே மூவர்தான், ஆனால் அப்போது சாண்டி, இப்போது 'சேரன்'!

Bigg Boss 3 Tamil: ஆமா, உண்மையிலையே Coincidence-தான?

 Share
EMAIL
PRINT
COMMENTS
அதே கஸ்தூரி, இதே மூவர்தான், ஆனால் அப்போது சாண்டி, இப்போது 'சேரன்'!

Bigg Boss 3 Tamil, Cheran, Losliya: சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் கேப்டன் பதவிக்காகப் போட்டி


Bigg Boss Tamil 3, Day 61: நேற்று, இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறந்த போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. வீட்டில் இருந்த அனைவரும் ஆலோசித்தப் பிறகு, சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் சிறந்தப் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்து இந்த வாரம் முழுவதிலும் சிறந்தப் போட்டியாளர் யார் என்ற கேள்வி வந்தது. அனைவரும் சேரனின் பெயரையே முன் வைத்தனர். ஆனால், வனிதா மட்டும் 'ஏன் நான் சிறந்த போட்டியாளர் இல்லை. நானும் இந்த வாரம் முழுவதும் சிறப்பாகத்தானே செயல்பட்டேன்' என்று தன் வாதத்தை வைத்தார். ஆனால் அனைவரின் ஆதரவும் சேரனுக்கு இருந்தது. அதனால் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டர். இவர்கள் மூவரும் வரும் வாரத்திற்கான கேப்டன் பதவிக்குப் போட்டியிடலாம்.

வீட்டின் கேப்டனான 'சேரன்'!

அப்படி இன்று வெளியான ப்ரோமோவில், இந்த வார கேப்டன் போட்டியில் யார் வெற்றி பெற்றார் என்பது தெளிவாக தெரிந்துள்ளது. இந்த வார கேப்டன் போட்டி சற்று வித்தியாசமாக நடந்தது. எப்போதும் உடல் சார்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வாரப் போட்டி சற்று மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்களைத் தவிர அனைவரும் இந்தப் போட்டியில் பங்குகொண்டார்கள். கேப்டன் பதவிக்கான போட்டியாளர்கள் சாண்டி, லாஸ்லியா, சேரன் ஆகியோரின் பெயர்கள் எழுதிய சீட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்களைத் தவிர்த்து ஒவ்வொருத்தரும் அந்த சீட்டுகளை எடுக்க வேண்டும். அந்த சீட்டில் யார் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். முதலில் யார் ஐந்து புள்ளிகளை பெறுகிறார்களோ, அவர்களே இந்த வாரத்தின் கேப்டன்.

துவக்கத்திலிருந்தே, சாண்டி மற்றும் சேரன் ஆகியோர் இடையே கடும்போட்டி நிலவியது. இருவரின் புள்ளிகளும் சமநிலையிலேயே சென்றுகொண்டிருந்த நிலையில், இறுதியில் சேரன் 5 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றார். சாண்டி 4 புள்ளிகளுடன், கேப்டன் பதவியை சிறிய இடைவெளியில் தவரவிட்டார். பாவம் லாஸ்லியா போட்டி முடியும் வரை ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்றிருந்தார். இறுதியில், சேரன் கேப்டனாக தேர்வானார்.

அவருக்கு நீண்ட நாளாகவே கேப்டன் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், சிறந்த போட்டியாளருக்கான தேர்வின்போது தன் பெயரை சொல்லவில்லை என்றால் குழந்தை போல சண்டையிடுவார். சிலமுறை சிறப்பாக செயல்படவில்லை என்று சிறைக்கு எல்லாம் அனுப்பியுள்ளனர். 

ஆனால், ஒருமுறை கேப்டன் போட்டிக்கு தகுதி பெற்றார். அப்போது போட்டியிட்டுக்கொண்டதும் இதே மூவர்தான். சாண்டி, சேரன், லாஸ்லியா ஆகியோர் கேப்டன் பதவிக்கு போட்டியிடும்போது, அந்தப் போட்டிக்கு நடுவராக கஸ்தூரி இருந்தார். சுவரில் வண்ணம் தீட்ட வேண்டும், யாருடைய வண்ணம் அதிகமாக இருக்கிறதோ, அவர்தான் கேப்டன். அப்போது, கஸ்தூரியின் தீர்ப்பால் பதவியைத் தவறவிட்டார். ஆனால், இப்போது அதே கஸ்தூரி எடுத்த சீட்டில்தான் கேப்டனாகவும் மாறியுள்ளார். என்ன ஒரு Coincidence. 

ஆமாம், இந்த வாரம் யார் ஜெயிலுக்குப் போனாங்க?  

வழக்கமாக, யார் சிறைக்குப் போலாம்னு ஆலோசனை பண்ணிட்டு இருக்கும்போது தர்சன், தான் போவதாக சொல்லிட்டு இருந்தார். நேத்து இது பத்தி விவாதம் வந்தப்போ, ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ், யாரும் சிறைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டார். முன்னாடி இதே மாதிரி தர்சன் சொன்ன அப்பவும், சிறை தண்டைனையை ரத்து செய்துவிட்டார் பிக் பாஸ். இதையெல்லாம் பார்க்கும்போது 'Mother of Coincidence' அப்படினு தான் சொல்லத் தோணுது. ஆமா, உண்மையிலையே Coincidence-தான?சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................