This Article is From Sep 14, 2019

Bigg Boss Tamil 3: இந்த வார எளிமினேஷனில் வெளியேறப்போவது யார்?

Bigg Boss Nomination: நாமினேஷனில் கவின் (Kavin), தர்சன் (Tharshan), சாண்டி (Sandy Master), செரின் (Sherin), வனிதா (Vanitha) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Bigg Boss Tamil 3: இந்த வார எளிமினேஷனில் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ் வீட்டின் 12வது வாரம் மிகவும் மகிழ்ச்சியானதாகவே இருந்தது. ஏனென்றால், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க பிக் பாஸ் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். முதல் நாளில் முகெனிடம் துவங்கி, கடைசி நாளில் சாண்டி வரை அனைவரின் உறவுகளும் பிக் பாஸ் வீட்டையும், போட்டியாளர்களையும் பார்வையிட்டனர், அவர்களின் வருகை பிக் பாஸ் ஆனந்தத்தை நிறப்பியது. ஆனால், அவை அனைத்தும் நேற்றுடன் ஓய்ந்தது. இப்போது எளிமினேஷன் என்ற ஒரு வருத்தமான நிகழ்வை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த வாரம் எளிமினேஷனுக்கான நாமினேஷனில், கவின் (Kavin), தர்சன் (Tharshan Thiyagarajah), சாண்டி (Sandy Master), செரின் (Sherin Shringar), வனிதா (Vanitha Vijayakumar) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Bigg Boss Tamil 3: கடந்த வார எளிமினேஷனில் சேரன் (Cheran) வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தாலும், பிக் பாஸ் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து ரகசிய அரையில் அமர வைத்தார். அடுத்து லாஸ்லியா, வனிதா மற்றும் தர்சன் ஆகியோர் இடையே நடைபெற்ற கேப்டன் டாஸ்க் போட்டியில், லாஸ்லியா (Losliya) வென்று இந்த வார வீட்டின் தலைவரானார். அதுமட்டுமின்றி நாமினேஷனிலிருந்தும் தப்பினார். முன்னதாகவே கவின் கடந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்கின் சிறப்பாக செயல்படாத போட்டியாளர் என்ற பெயரில், கவின் நேரடியாக எவிக்சன் செயல்முறைக்கு நேரடியாக தேர்வானார். இந்த வார நாமினேஷனில், முகென் மட்டும் தப்பிப் பிழைக்க, தர்சன், சாண்டி, வனிதா மற்றும் செரின் ஆகியோர் நாமினேட் ஆகினர்.

இன்னிலையில், இந்த ஐந்து பேரில் வனிதா வெளியேறிவிடுவார் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. வனிதா வீட்டிற்குள் சென்ற 5 வாரங்களில் முதன்முறையாக இந்த வார நாமினேஷனில்தான் இடம்பெற்றிருந்தார். முதலில் 8வது வாரத்தில் நாமினேஷன் முடிந்தவுடன் வீட்டிற்குள் நுழைந்தார். அதனால், அடுத்த வாரத்தில் நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம், நாமினேஷனில் இருந்து தப்பிக்க ஒரு சிறப்பு பவர் வழங்கப்பட்டது. 4வது வாரத்தில் வீட்டின் கேப்டன் ஆனார். தற்போது ஐந்தாவது வாரத்தில், முதன்முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருக்கிறார்.

மருபுறம், கவின் வெளியேற்றப்படுவார் என்றும் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். கவின் இதுவரை நிகழ்ந்த நாமினேஷன்களில்  6 முறை இடம்பெற்றுள்ளார். அவற்றில் 5 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறார். 6வது முறையாகவும் காப்பாற்றப்படுவாரா?

சேரனுக்கு ரகசிய அறை, கவினுக்கு பப்ளிக்கா ஒரு அரை'

இன்னிலையில், இன்றிய நாளின் முதல் ப்ரோமோ (Bigg Boss Promo) வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் 'சேரனுக்கு ரகசிய அறையும், கவினுக்கு பப்ளிக்கா ஒரு அரையும் கிடைச்சது" என்று இந்த வார நிகழ்வுகளை கேலியாக சொல்லியுள்ளார்.

.