This Article is From Jun 03, 2020

இந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

'இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு பெயர் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில்  எங்களால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடாபான முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்'

இந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு!  உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்தியாவை பாரத் என மாற்றக்கோரும் வழக்கில் தங்களால் முடிவு எடுக்க முடியாது என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.

ஹைலைட்ஸ்

  • A Delhi-based businessman, Namaha, filed the petition
  • "India is already called Bharat in constitution," top court said
  • The Supreme Court had dismissed a similar petition in 2016
New Delhi:

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றக்கோரிய தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.  உச்ச நீதிமன்றம் தனது  உத்தரவில், இந்தியாவை பெயர் மாற்றுவது தொடர்பாக மத்திய  அரசே முடிவு எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த வர்த்தகரான நமஹா என்பவர்,  இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  அவர் தனது மனுவில்,  இந்தியா என்பதை அடிமை மனநிலையை குறிப்பதாகவும், இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.  பாப்டே தலைமையிலான அமர்வு  முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு பெயர் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில்  எங்களால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இதுதொடாபான முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்' என்று நீதிபதிகள் கூறினர். 

மனுதாரர் தனது மனுவில், ' "இந்தியா" என்ற பெயர் நாட்டிற்குள் இருந்து பெறப்படவில்லை; இது "இண்டிகா" என்ற வார்த்தையிலிருந்து பிறந்த கிரேக்க வம்சாவளியின் பெயர். "பாரத் மாதா கி ஜெய்" என்ற கோஷம் நாட்டின் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

"ஆங்கிலப் பெயரை நீக்குவது குறியீடாகத் தோன்றினாலும், இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்டுவது நமது சொந்த தேசத்தில், குறிப்பாக வருங்கால சந்ததியினருக்கு பெருமை சேர்க்கும். " என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோன்ற மனுவை உச்சநீதிமன்றம் 2016 ல் தள்ளுபடி செய்தது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, அரசியலமைப்பு இந்தியா மற்றும் பாரத் என்ற இரண்டு பெயர்களை ஏற்றுக்கொண்டது.

பிரிட்டிஷ் இந்தியா இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டது. ஆனால் அரசியமைப்பு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் சிலர் அதை எதிர்த்தனர். விவாதங்களின் போது, ​​அரசியலமைப்பை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கர், நாடு இந்தியா என உலகளவில் அறியப்பட்டதாகவும், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.

கடைசியாக அரசியலமைப்பு சட்ட பிரிவு 1 (1), இந்தியா என்ற பாரத் மாநிலங்களின் ஒருங்கிணைப்பாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. 

.