பயணிக்கு பாலியல் தொந்தரவு: கைதான ஓலா ஓட்டுநர்!

சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திலேயே ஓடுநர் அருண் என்பவர் கைது செய்யப்பட்டார். ஓலா நிர்வாகமும் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளது

The Bengaluru woman says the Ola driver stopped the car at a deserted spot and assaulted her

ஹைலைட்ஸ்

  • இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஓட்டுநர்
  • உடனடியாக காவல்துறையில் புகார்
  • மூன்று மணிநேரத்தில் ஓட்டுநர் கைது
Bengaluru: பெங்களூரில் இளம் பெண் ஒருவர் விமான நிலையத்துக்குச் செல்வதற்காக ஓலா வாகனம் பதிவு செய்துள்ளார். ஆனால், வாகனம் விமான நிலையத்துக்குச் செல்லாமல் மாற்றுப் பாதையை எடுத்துச் சென்றுள்ளது. வாகனத்தில் வந்த இளம் பெண்ணை அந்த ஓலா டிரைவர் பலவந்தப்படுத்தி தவறான முறையில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் பரவச்செய்துள்ளார்.

பெங்களுரூவைச் சேர்ந்த 26 வயதான பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒரு கட்டடப் பொறியாளர் ஆவார். அதிகாலை 2 மணிக்கு மும்பை செல்வதற்காக விமானநிலையம் கிளம்பியுள்ளார் அப்பெண். அப்போது ஓலா வாகனம் பதிவு செய்து வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெங்களூரு விமானநிலையப் பாதையில் உள்ள டோல்கேட் அருகே டிரைவர் மாற்றுப்பாதை எடுத்துச் சென்றுள்ளார்.

அப்பெண் வினவிய போது இதுதான் எளிமையான வழி என ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார் அந்த ஓலா டிரைவர். யாரும் இல்லாத பகுதியில் வண்டியை நிறுத்தி பயணியின் கையில் இருந்த போனைப் பிடுங்கிவிட்டு அவரைப் பலவந்தப்படுத்திக் கொடுமை செய்துள்ளான் டிரைவர். அதன் பின்னர் அப்பெண் கெஞ்சியதால் புகைப்படம் எடுத்துவிட்டு விமான நிலையத்திலேயே இறக்கிவிட்டுள்ளான்.

இதன் பின்னர் அப்பெண் போலீஸாருக்கு மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த மெயிலை புகாராக எடுத்துக்கொண்ட காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட உடனேயே அப்பெண் சற்றும் தாமதிக்காமல் போலீஸாருக்குப் புகார் அனுப்பியதுதான் தவறுசெய்தவனைக் கைது செய்ய உதவியது என போலீஸார் அப்பெண்ணுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திலேயே ஓடுநர் அருண் என்பவர் கைது செய்யப்பட்டார். ஓலா நிர்வாகமும் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளது.