இந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா... பேச்சுவார்த்தைக்கு தயார் - மேற்கு வங்க மருத்துவர்கள் குழு

“பேச்சு வார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். மூடிய கதவுகளுக்கு பின்னால் பேச மாட்டோம். ஊடகங்களின் முன்னிலையில் தான் பேச்சு வார்த்தை” என்று கோரிக்கை வைத்துள்ளது மருத்துவர்கள் அமைப்பு

 Share
EMAIL
PRINT
COMMENTS

மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்


Kolkata: 

மேற்கு வங்கத்தில் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒரு வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மருந்த்துவர்கள் அமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. 

மருத்துவ பலன் இன்றி இறந்து விட்ட நோயாளியின் உறவினர் ஒருவர் ஜூனியர் டாக்டர்கள் இருவரை தாக்கினார். இதனால் மருத்துவர்களுக்கு மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு வேண்டும் என்று கூறி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். மருத்துவர்களை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்த போது அதற்கு முதலில் மருத்துவர்கள் அமைப்பு மறுப்பு தெரிவித்துவிட்டது. என்.ஆர்.எஸ் மருத்துவமனையில்  மருத்துவர்கள் அமைப்பின் சந்திப்பிற்கு பின் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளது.

“பேச்சு வார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். மூடிய கதவுகளுக்கு பின்னால் பேச மாட்டோம். ஊடகங்களின் முன்னிலையில் தான் பேச்சு வார்த்தை” என்று கோரிக்கை வைத்துள்ளது மருத்துவர்கள் அமைப்பு. ஆனால் இதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

என்.ஆர்.எஸ் மருத்துவமனையில்தான் கூட்டம் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................