மார்க்கெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பாஜக எம்எல்ஏ.. மேற்குவங்கத்தில் பரபரப்பு!

எம்.எல்.ஏ தேபேந்திர நாத் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சந்தை அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மார்க்கெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பாஜக எம்எல்ஏ.. மேற்குவங்கத்தில் பரபரப்பு!

மார்க்கெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பாஜக எம்எல்ஏ.. மேற்குவங்கத்தில் பரபரப்பு!

Kolkata:

மேற்குவங்கத்தில் மார்க்கெட் பகுதியில் பாஜக எம்எல்ஏ ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தையில் பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனை பாஜக தரப்பு கொலை என குற்றம்சாட்டியுள்ளது. 

எம்.எல்.ஏ தேபேந்திர நாத் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சந்தை அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அவரது குடும்பத்தை சேர்ந்தவர் ஒருவர், நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்து ஒரு சிலர் அவரை அழைத்துச் சென்றதாக கூறுகின்றனர். 

இதைத்தொடர்ந்து, இன்று காலை அவர் சடலாமக காணப்பட்டுள்ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வார்கியா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மேற்குவங்கத்தில் பாஜக தலைவர்கள் கொல்லப்படுவதற்கு முடிவே இல்லையா. கொல்லப்பட்ட எம்எல்ஏ திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். அவர் பாஜகவில் இணைந்ததால் தான் கொலை செய்யப்பட்டாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, தேபேந்திர நாத் ஹேம்தாபாத் சந்தையில் உள்ள ஒரு கடையின் அருகே தூக்கில் தொங்கியபடி காணப்பட்டுள்ளார். தொடர்ந்து, விசாரணை நடத்த வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

தேபேந்திர நாத் ஹேம்தாபாத் சட்டசபை தொகுதியில் பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 2016ல் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் அவர் பாஜகவுக்கு தாவினார்.