காலி செய்யப்பட்ட 'பேய் நகரம்', யுஎஃப்ஒ வடிவில் வீடுகள், என்ன இருக்கிறது இந்த மர்ம நகரத்தில்!

1970-களில் இந்த நகரம் ஏன் கைவிடப்பட்டது என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

காலி செய்யப்பட்ட 'பேய் நகரம்', யுஎஃப்ஒ வடிவில் வீடுகள், என்ன இருக்கிறது இந்த மர்ம நகரத்தில்!

யுஎஃப்ஒக்கள் (UFOs) போன்ற வடிவிலான வீடுகள் நிறைந்த 'வான்லி' நகரம்.

'வான்லி' என்பது தைவானில் உள்ள ஒரு மர்மத்தில் மூழ்கிய நகரம். முழுவதுமாகவே யுஎஃப்ஒக்கள் (UFOs) போன்ற வடிவிலான வீடுகள் நிறைந்த இந்த நகரம், 1970-களில் முற்றிலுமாக காலிசெய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இதற்கான காரணம் என்ன என்பது யாருக்குமே சரியாகத் தெரியவில்லை. தற்போது இந்த பகுதிக்குள் நுழைந்த இன்ஷ் என்ற ஒரு நிறுவனம் வான்லி முழுவது வீடியோ எடுத்து, இந்த பேய் நகரத்தில் என்ன மறைந்திருக்கிறது என்பதை வெளியிட்டிருக்கிறது.

வான்லியில் இரண்டு வகையில் வீடுகளின் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. வென்ச்சுரோஸ் (Venturos) எனப்படும் பாக்ஸ், அல்லது சதுர வடிவ கட்டமைப்புகள், ஃபியூச்சுரோஸ் (Futuros) என்று அழைக்கப்படும் பறக்கும்-தட்டு வடிவிலான கட்டமைப்புகள். அட்லஸ் அப்ச்குரா (Atlas Obscura) தளத்தில் குறிப்பிட்டிருப்பதன்படி, இந்த வீடுகளை பின்னிஷ் கட்டிடக் கலைஞர் மேட்டி சூரோனென் (Matti Suuronen) வடிவமைத்தார். இருப்பினும், வான்லியில் உள்ள குடியிருப்புகள் சூரோனனால் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதைவிட மர்மமான விஷயம் என்னவென்றால், அவை எங்கிருந்து வந்தன, அவை எப்போது, எப்படி கட்டப்பட்டது என்பது குறித்து கூட எந்த தகவலும் இல்லை!

மேலும், 1970-களில் இந்த நகரம் ஏன் கைவிடப்பட்டது என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. அருகிலுள்ள இடங்களின் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் காரணமாக மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இங்குள்ள வீடுகள் கட்ட முடியாத அளவு விலை உயர்ந்தவை, மக்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற இதுவும் கூட காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சில நேரங்களில் குறிப்பிடப்படுவது போல், யுஎஃப்ஒ (UFO) கிராமத்தை, பேய் நகரம் என மக்கள் நம்புகிறார்கள். இன்ஷ் கூறியதன்படி, இந்த நகரத்தின் கட்டுமானத்தின் போது விவரிக்கப்படாத பல விபத்துக்கள் மற்றும் தற்கொலைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள், இந்த நகரம் பேய் நகரம் என மக்கள் மத்தியில் மேலும் நம்பவைத்தது.

பெரும்பகுதியிலான மக்கள், இந்த நகரத்தை ஒரு பேய் நகரம் என நம்பினாலும், இன்னும் சிலர் இந்த நகரத்தில் வசித்த வண்ணமே உள்ளனர்.

அந்த நகரத்தை நீங்களும் சுற்றிப்பாருங்கள், இன்ஷ் வோர்ல்ட் வெளியிட்ட வீடியோவின் மூலமாக..!

இந்த பேய் நகரத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கருத்துகள் பகுதியைப் பயன்படுத்தி உங்கள் கருத்துகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Click for more trending news