This Article is From Feb 09, 2019

உற்பத்திக்கான கலால் வரி இருமடங்கானதால் பீர் விலை உயர்கிறது

விலை உயர்வுக்கான அறிவிப்பு கர்நாடக பட்ஜெட் தாக்கலின்போது அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான குமாரசாமி வெளியிட்டிருக்கிறார்.

உற்பத்திக்கான கலால் வரி இருமடங்கானதால் பீர் விலை உயர்கிறது

புதிய அறிப்பின் மூலம் மாநில அரசுக்கு ரூ. 20,950 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bengaluru:

உற்பத்திக்கான கலால் வரியை இரு மடங்காக்கி கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் பீர் விலை உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

கர்நாடக பட்ஜெட்டை அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான எச்.டி. குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசித்த குமாரசாமி, உற்பத்திக்கான கலால் வரி தற்போது 150 சதவீதமாக உள்ளது. இது 175 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். 

இதன்படி லிட்டருக்கு ரூ. 5-ல் இருந்து ரூ. 10-ஆக கலால் வரி அதிகரிக்கும். கூடுதல் வரியாக ஒரு பாட்டிலுக்கு தற்போது விதிக்கப்படும் ரூ. 12.5-ல் இருந்து ரூ. 25-ஆக அதிகரிக்கும். 

இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1-ம்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ. 20,950 கோடி வருவாய் கிடைக்கும். முன்னதாக கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான வருவாய் ரூ. 19,750-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

.