’கவனமாக பேசுங்கள்’ யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள், ஆனால், மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே வழங்குகிறார் என்று கூறியிருந்தார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
’கவனமாக பேசுங்கள்’ யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

ராணுவத்தை, ’மோடியின் ராணுவம்’ என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறினார்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. தேர்தல் ஆணையத்தால் யோகி கடுமையாக கண்டிக்கப்பட்டார்.
  2. மோடியின் ராணுவம்’ என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
  3. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் எதிர்கட்சியனரால் விமர்சிக்கப்பட்டது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சை பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆதித்யநாத், 'மோடியின் ராணுவம்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பேசி 5 நாட்களை கடந்த நிலையில் நேற்றைய தினம் யோகியின் பேச்சை கண்டித்த தேர்தல் ஆணையம், ' வருங்காலங்களில் கவனமாக பேசுங்கள்' என்று அறிவுரையும் வழங்கியுள்ளது.

கடந்த ஞாயிறன்று உத்தரபிரதேசம் காஸியாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள், ஆனால், மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே வழங்குகிறார் என்று கூறியிருந்தார்.

மேலும், இதுவே காங்கிரஸாருக்கும் மோடி தலைமையிலான பாஜக-வுக்கும் உள்ள வேறுபாடு, காங்கிரஸார் மசூத் அசார் போன்ற தீவிரவாதிகளை 'ஜீ' என்று மரியாதையுடன் அழைப்பார்கள். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு தீவிரவாதிகளின் கூடாரத்தையே அழித்து அவர்களின் முதுகெலும்புகளை உடைக்கும் திறன் கொண்டது என்றார்.

யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சு முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆயுதப்படைகள் போன்ற அரசியலற்ற துறைகளை நிர்வாகிப்பவர்கள், தேர்தல் அரசியில் தலையிடக்கூடாது.

ஆனால், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் மோடியின் ராணுவம் என்று குறிப்பிடுகிறார். இது நமது அன்பிற்குரிய ராணுவத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

இதேபோல், மத்திய அமைச்சர் வி.கே.சிங், ராணுவம் என்பது ஒட்டு மொத்த தேசத்தையும் சார்ந்ததே தவிற எந்த ஒரு தனி மனிதருக்கும் உரியது அல்ல என்று யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவத்திருந்தார்.

எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற பேசக் கூடாது என்று எச்சரித்த தேர்தல் ஆணையம். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................