ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு காவலர் உயிரிழப்பு!

Baramulla Attack: ஜம்மு-காஷ்மீரில் ஒரே வாரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் ஆகும்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு காவலர் உயிரிழப்பு!

Baramulla Attack:ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு காவலர் உயிரிழப்பு!

Baramulla, Jammu and Kashmir:

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு காவலர் என 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

சிஆர்பிஎஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் குழுவினர் கிரீரி சோதனை சாவடி அருகே சோதனை பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பிச்சென்றதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் அதிகாரி விஜயகுமார் கூறும்போது, இந்த தாக்குதலில் மூன்று வீரர்களை நாம் இழந்துள்ளோம். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழு விரைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காஷ்மீர் மண்டல போலீசார் தங்களது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பாராமுல்லாவின் கிரீரி பகுதியில் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், 2 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு ஜம்மு-காஷ்மீர் காவலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் ஒரே வாரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் ஆகும்.

ஆக.14ம் தேதி ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நோவ்காமில் காவல்துறையினர் குழு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். மற்றொருவர் படுகாயமடைந்தார். 

இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை ட்விட்டர் பதிவில், நோவ்காம் பைபாஸ் அருகே போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 காவல்துறையினர் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அதில், பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்லும் வகையில் பாதுகாப்பு குறைப்பாடு இருந்தது தெரியவந்துள்ளது.