This Article is From Mar 04, 2020

கடன் மோசடி வழக்கு! அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டுகள் சிறை!!

வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதால் வழக்கு அங்கு மாற்றப்பட்டது.

கடன் மோசடி வழக்கு! அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டுகள் சிறை!!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த 2014 முதல் 2019 வரையில் அதிமுக எம்.பி.யாக இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன்.

ஹைலைட்ஸ்

  • சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
  • ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை விதிப்பு
  • வங்கி மேலாளர் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கடன்மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.என். ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த 2014 முதல் 2019 வரையில் அதிமுக எம்.பி.யாக இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர், தனது கல்லூரியின் விரிவாக்க பணிகளுக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ. 20 கோடி கடன் கேட்டதாகவும், இதற்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் கடனை வழங்க அதிகாரிகள் மறுத்ததாக தெரிகிறது. 


இதன்பின்னர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து ராமச்சந்திரன் கடனை பெற்றதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான புகாரில், ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதால் வழக்கு அங்கு மாற்றப்பட்டது.

இன்று காலை வழக்கு விசாரணை நிறைவுபெற்று மதியம் தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன.

இதன்படி கடன் மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி. ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

.