“மோடி அரசு, மூழ்கும் கப்பல்; ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கைவிட்டுவிட்டது”- மாயாவதி தாக்கு!

2019 நாடாளுமன்றத் தேர்தல், 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
“மோடி அரசு, மூழ்கும் கப்பல்; ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கைவிட்டுவிட்டது”- மாயாவதி தாக்கு!

மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 


Lucknow: 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “மோடி அரசு, ஓர் முழ்கும் கப்பல். அந்த கப்பலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கைவிட்டுவிட்டது“ என்று விமர்சித்துள்ளார். மாயாவதி தனது தேர்தல் பரப்புரைகளின் போதும், பிரதமர் மோடியை தொடர்ந்து தாக்கி பேசி வந்தார். இந்நிலையில் மோடி குறித்த இந்த விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக அவர், “உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரங்களின் போது, தலித்துகள் மீது தனக்கு அக்கறை இருப்பது போல பிரதமர் நரேந்திர மோடி காட்டிக் கொள்கிறார். ஆனால், அவருக்கு உண்மையில் அப்படி ஒரு அக்கறையும் இல்லை. தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளின் போது அவர் அமைதி காத்தவர். அரசியல் ஆதாயத்துக்காக தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார் பிரதமர்” என்று கருத்து தெரிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பாஜக உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 இடங்களில் 71 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால், இந்த முறை அத்தனை தொகுதிகளை கைப்பற்றுவது கடினம் என்று சொல்லப்படுகிறது. 

2019 நாடாளுமன்றத் தேர்தல், 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், மே 19 ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................