This Article is From Apr 28, 2019

அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர், தன் சாதியை பிற்படுத்தோர் பட்டியலில் இணைத்தார்- மாயாவதி

சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, ‘எதிர்கட்சிகள் தன்னை கீழ்த்தரமான நபராக நினைக்கிறது’ என்று பேசினார்.

அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர், தன் சாதியை பிற்படுத்தோர் பட்டியலில் இணைத்தார்- மாயாவதி

'முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் போல அவர் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறக்கவில்லை’

Lucknow:

சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, ‘எதிர்கட்சிகள் தன்னை கீழ்த்தரமான நபராக நினைக்கிறது' என்று பேசினார். அதற்கு பதில் கருத்து கூறும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ‘பிரதமர் மோடி, அரசியல் ஆதாயத்துக்காகவே தன்னுடைய சாதியை இதர பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

அவர் மேலும் இது குறித்து பேசுகையில், ‘அரசியல் ஆதாயம் என்ற ஒரே நோக்கத்துக்காக, குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தபோது, தனது சாதியை இதர பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்தார். முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் போல அவர் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறக்கவில்லை' என்று விளக்கினார்.

உத்தர பிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது பிரதமர் மோடி, ‘எனது அரசியல் எதிரிகள் பேசும் வரை, இந்த நாடு எனது சாதி குறித்து அறிந்திருக்கவில்லை. மாயாவதி, அகிலேஷ், காங்கிரஸ் போன்றோர் எனது சாதி குறித்து பேசுவதற்கு நன்றி. பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, நாட்டுக்கு சேவை செய்வதை பெருமையாகக் கொள்கிறேன்' என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் இந்த கருத்துக்குத்தான் மாயாவதி தற்போது எதிர்வாதம் வைத்துள்ளார். 

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ்- மாயாவதி கூட்டணி அமைந்திருப்பது குறித்து மோடி, ‘அம்பேத்கரை எதிர்த்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார் மாயாவதி. அம்பேத்கரின் பெயரில் ஓட்டு கேட்கும் சிலர், அவரிடமிருந்து எதையும் கற்கவில்லை. பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் இப்படி கொள்கை தவறி கூட்டணி வைக்க முடியும்.

அகிலேஷ், மாயாவதி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தால், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட மாட்டார்கள். காரணம், அவர்கள் உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது உள்ளூர் ரவுடிகளையே அடக்க முடியாமல் சிரம்பபட்டனர்' என்றார். 

மேலும் படிக்க ‘அவர்கள் செய்வது சாதி அரசியல்!'- அகிலேஷ், மாயாவதியை வறுத்தெடுத்த பிரதமர் மோடி
 

.