This Article is From Apr 20, 2019

தலை முதல் கால் வரை தோலின்றி பிறந்த குழந்தை - காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்

கடந்த வாரம் முதல் குழந்தையை டெக்ஸாஸ் குழந்தைகள் நல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தலை முதல் கால் வரை தோலின்றி பிறந்த குழந்தை -  காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்

"என் குழந்தைக்காக எப்போதும் போராடுவேன்" தாய் பிரிஸ்சில்லா

25 வயதான பிரிஸ்சில்லா மல்டனாதாஸ் தன்னுடைய குழந்தை பிறப்பை கொண்டாட முடியாத சூழலில் உள்ளார். புத்தாண்டில் தன்  குழந்தை ஜாப்ரியை பெற்றெடுத்த அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.  பிறந்தவுடன் குழந்தையை காட்டவில்லை. குழந்தை என்ன எடையுடன் பிறந்திருப்பான், உடல் நலத்துடன் இருக்கிறானா இல்லையா என்ற தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார் தாய் பிரிஸ்சில்லா.

 ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் குழந்தைகளுக்கான ஐசியூவில் உடல் முழுவதும் ட்யூப் மற்றும் பேண்டேஜ்ஜுடன் தன் குழந்தையை பார்த்ததாகக் கூறுகிறார். தலை முதல் கால் வரைக்கும் குழந்தைக்கு மேல் தோல் இல்லை என்பதை தெரிந்து கொண்டுள்ளார். தலையில் கூட தோல் இன்றி மண்டையோடு தெரிகிறது. மரபணு கோளாறினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்ட நிலையில், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற போராடி வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் குழந்தையை டெக்ஸாஸ் குழந்தைகள் நல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனை கொடுத்த அறிக்கையில்  ஜாப்ரியின் குடும்பத்தினர்க்கு குழந்தையை காப்பாற்றும் பயணம் மிகவும் கடினமானது. குழந்தையை கவனமாக பார்த்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. 

ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனைக்கு வந்து தங்கி குழந்தையை பார்க்க ஹோட்டல் செலவினை பிரிஸ்சில்லாவின் முதலாளி செய்வதாக தெரிவித்தவர். தன் குழந்தையின் மருத்துவச் செலவினை 2000க்கும் மேற்பட்டோர் கொடுத்த பண உதவியினால் செய்ததாகக் கூறினார்.  சுமார் 74,000 டாலர் தனக்கு பிறர் உதவியால் கிடைத்ததாகக் கூறினார். 

குழந்தையின் உயிருக்காக போராட எப்போதும் தயாராகவுள்ளோம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.