சாலையின் மத்தியில் குழந்தையை இறக்கிவிட்ட தாய் - வைரல் வீடியோ

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சாலையின் நடுவே குழந்தையை இறக்கிவிட்ட வீடியோ காட்சி வைரலாகி உள்ளது

2 Shares
EMAIL
PRINT
COMMENTS
சாலையின் மத்தியில் குழந்தையை இறக்கிவிட்ட தாய் - வைரல் வீடியோ
Hyderabad: 

ஹைதராபாத்: கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சாலையின் நடுவே குழந்தையை இறக்கிவிட்ட வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

ஹைதரபாத்தில் உள்ள பிரதான சாலையில், கணவன் மனைவி இடையே வாக்குவாதம் நடைப்பெற்று வந்தது. அப்போது இருவருக்கும் இடையேயான மோதல் வலுத்ததால், கையில் இருந்த குழந்தையை சாலையில் இறக்கிவிட்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார் அந்த பெண்.

வாகனங்கள் வந்து செல்லும் முக்கியமான சாலை என்பதால், குழந்தையை இறக்கிவிட்ட வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி, குழந்தையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர், குழந்தைகள் அவசர உதவி காப்பகத்திற்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். இதனால், சில மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................