சபரிமலைக்கு செல்லும் வழியில் தமிழக இளைஞர் மாரடைப்பால் மரணம்!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளாவை தவிர்த்து, தமிழ்நாடு தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். 

சபரிமலைக்கு செல்லும் வழியில் தமிழக இளைஞர் மாரடைப்பால் மரணம்!!
Sabarimala:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் தமிழகத்தை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற 29 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் பெண்களை அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு வருபவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க முடியாது என்றும் கேரள அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற இளைஞர் ஐயப்பன் கோயிலுக்கு சென்றார். நீலமலையில் அவர் மலையேறிக் கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னர் திடீரென அவர் உயிரிழந்தார்.

மாதேஸ்வரனின் மரணத்திற்கு மாரடைப்பே காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக அவரை சன்னிதானம் மருத்துவமனையில் பக்தர்கள் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளாவை தவிர்த்து, தமிழ்நாடு தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். 

More News