This Article is From Nov 15, 2019

சன்னி வக்ஃபு வாரியம் மசூதிக்கு பதிலாக வழங்கும் மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்றி தீர்வு காண்போம். தீர்ப்பு குறித்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்

சன்னி வக்ஃபு வாரியம் மசூதிக்கு பதிலாக வழங்கும் மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது

பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜாமியத் உலேமா ஏ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மெளலானா அர்ஷத் மதானி பேசினார் (File)

New Delhi:

மசூதி இருந்த இடத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கினால் அதனை சன்னி வக்ஃபு வாரியம் அதை ஏற்கக் கூடாது  ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு தெரிவித்துள்ளது. 

பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜாமியத் உலேமா ஏ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மெளலானா அர்ஷத் மதானி “ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாத வகையிலே உள்ளது. பாபர் மசூதி இருந்த இடத்திற்கு பதிலாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது. 

எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் மசூதிக்கு மாற்று நிலத்தை ஏற்றுக் கொள்ளாது. பாபர் மசூதி இருந்த இடத்திற்கு பதிலாக மாற்று நிலமோ, பணமோ வழங்கினால் அது மசூதிக்கு ஈடாகி விடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்றி தீர்வு காண்போம். தீர்ப்பு குறித்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 

பிரச்சினை நிலத்தைப் பற்றியது அல்ல. எங்களுக்கு நிலம் தேவையில்லை. முஸ்லிம்களுக்கு நிலம் தேவையில்லை என்று  தெரிவித்தார். 

.