This Article is From Nov 09, 2019

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கை மறுக்க முடியாதது -தலைமை நீதிபதி

Ayodhya Case Judgement: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை வழங்கிய சான்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் அதன் கண்டுபிடிப்புகளை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கை மறுக்க முடியாதது -தலைமை நீதிபதி

இந்துக்கள் அயோத்தியை பகவான் ராமின் பிறப்பிடமாக கருதுகின்றனர்

New Delhi:

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கை “மறுக்க முடியாதது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. “இந்துக்கள் அயோத்தியை பகவான் ராமின் பிறப்பிடமாக கருதுகின்றனர். அவர்களுக்கு மத உணர்வுகள் உள்ளன. 

ராமர் குவிமாடத்தின் கீழ் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கை மறுக்க முடியாதது”என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தீர்ப்பை வாசிக்கும்போது தெரிவித்துள்ளார்.

 “அயோத்தி என்பது ராமரின் பிறப்பிடமாக இருந்தது என்று இந்துக்கள் நம்புவதற்கு வரலாற்று விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன”ஆங்கிலேயர்கள் படையெடுப்பதற்கு முன்னர் “ராம் சபுத்ரா” மற்றும் “சீதா ரசோய்” ஆகியவை இந்துக்களால் வழிபடப்பட்டன என்று சான்றுகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார். 

“சர்ச்சைக்குரிய நிலத்தின் வெளிப்புறத்தில் இந்துக்கள் இருந்ததாக பதிவுகளில் உள்ள சான்றுகள் காட்டுகின்றன” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை வழங்கிய சான்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் அதன் கண்டுபிடிப்புகளை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

.