சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Here are the top 10 updates on the Ayodhya verdict:
சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தொடர்ந்து 40 நாட்களாக அயோத்தி வழக்கை விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, சந்திரா சூட், அசோக்பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நவம்பர் 17-ம்தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். இதற்கு முன்பாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேதி குறிக்கப்பட்டிருந்தது.
தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் காணப்பட்டது. உத்தரப்பிதேசத்தில் மட்டும் 12 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தீர்ப்பையொட்டி ட்வீட் செய்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, 'அயோத்தி தீர்ப்பு என்பது யாருக்கும் வெற்றியோ தோல்வியோ கிடையாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், நமது நாட்டின் அமைதியையும், நல்லிணகக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.' என்று கூறியிருந்தார்.
1980-களில் அயோத்தி பிரச்னை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்கு பிரச்னை நீடித்திருந்தது.
அயோத்தி வழக்கு தொடர்பாக 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவை வழங்கியது. இதன்படி, சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு ஒரு பங்கை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடப்பட்டது.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ல் வலது சாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் 2 ஆயிரம்பேர் கொல்லப்பட்டனர்.
தீர்ப்பையொட்டி அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று பல்வேறு இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.